.

Pages

Tuesday, January 21, 2014

அதிரையில் ஆம் ஆத்மி கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணிகள் தீவிரம் !

ஊழல் குறித்த பிரச்சாரத்தை மேற்கொண்டுவரும் புதிய கட்சியான ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சியை பிடித்துள்ளது. இக்கட்சி பாராளுமன்ற தேர்தலிலும் அதிகமான தொகுதிகளை வெல்ல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு மாநிலங்களிலும் அதன் நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகின்றது.

தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டுள்ள ஆம் ஆத்மி கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் கடந்த [ 19-01-2014 ] அன்று சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

தேசிய செயற்குழு உறுப்பினர் பிரசாந்த் பூஷன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அதிரை உமர் தம்பி மரைக்கா, அலி அக்பர், சேக் அப்துல்லா உள்ளிட்ட அதிரையர்கள் கலந்துகொண்டார்கள். ஆம் ஆத்மி கட்சிக்காக மும்முரமாக செயலாற்றி வரும் இவர்களுக்கு தஞ்சை மாவட்ட அளவில் முக்கிய பொறுப்பு வழங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆம் ஆத்மி கட்சிக்காக கடந்த சில நாட்களாக அதிரை மற்றும் அதனை சுற்றி இருக்கக்கூடிய கிராமப்பகுதிகளுக்கு சென்று உறுப்பினர்களை சேர்க்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் ஆர்வலர்களை கட்சியின் அலுவலகத்திற்கு அழைத்து கலந்தாலோசனையும் செய்து வருகின்றனர். மேலும் மாவட்ட பொறுப்பாளர்களின் ஆலோசனைக்கு பிறகு அதிரையில் ஆம் ஆத்மி கட்சிக்கு அறிமுக கூட்டம் ஒன்றை நடத்துவதற்கு இதன் பொறுப்பாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.








4 comments:

  1. Entha padaththa parkkumpodu aathme markal kaielvelakkamaru ellatha kurai .

    ReplyDelete
  2. முன்பொரு காலத்தில் அதிரை மக்கள் தன் தலையில் தொப்பி அணிந்திருந்ததை மேற்கொண்ட படம் நினைவுக்கு வருது , சந்தோசம் தான் போங்க.

    ReplyDelete
  3. >>As if once corruption from bureaucracy and police removed, communalism too would end and illegal arbitrary arrest of Muslim youth too end.<<

    An aam Indian Muslim’s open letter to Aam Aadmi Party

    ReplyDelete
  4. "எல்லார தலையிலும் தொப்பிப்பா! இந்தக் கட்சி நம்மூருக்கு ரொம்பப் பொருத்தம்பா!" - அத்திரைப் பாமரர்கள் புகழ்வது புரிகிறது.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.