.

Pages

Friday, January 3, 2014

விடுபட்ட குளங்களுக்கு விரைவில் தண்ணீர் ! பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மலைஅய்யன் நேரில் ஆய்வு !

கல்லணை கால்வாய் கோட்ட பொறுப்பில் இருக்கும் அலுவலர்களால் பட்டுக்கோட்டை வட்டார எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் பாசனத்திற்காகவும், வறண்டு காணப்படும் ஏரி, குளங்களுக்கும் முறை வைத்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகின்றன.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்களின் முயற்சியின் கீழ் சிஎம்பி வாய்கால் எண் 20 வழியாக இதன் இணைப்பில் உள்ள அதிரை குளங்களுக்கு தண்ணீர் வந்தடைந்தது. இவ்வாறு வந்தடைந்த தண்ணீர் ஆங்காங்கே காணப்பட்ட கிளை வாய்க்கால் மூலம் உபரிகளாக பிரிந்து திசை மாறிச்சென்றதாலும் வறண்டு காணப்பட்டு வந்த செக்கடி, ஆலடிக்குளம் உள்ளிட்ட பிற குளங்களுக்கு எதிர்பார்த்திருந்த தண்ணீர் முழுவதும் வந்தடையவில்லை.

இதற்கிடையில் அரசால் முறை வைத்து வழங்கிய கெடு முடிவுற்றதால் தண்ணீர் வரத்து அடியோடு நின்றுவிட்டது. இதனால் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த அதிரை பொதுமக்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர்.

பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சரோஜா மலைஅய்யன் அவர்கள் ஆய்வு செய்ய நமதூருக்கு வந்துள்ளார் என்று நமக்கு வந்த தகவலின் அடிப்படையில் அடுத்த சில நிமிடங்களில் களத்திற்கு சென்றடைந்தோம்.

அதிமுக கட்சியின் பொதுக்குழு உறுப்பினரும், தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மையினர் நலபிரிவின் செயலாளருமாகிய அதிரை அப்துல் அஜீஸ் அவர்கள் நம்மிடம் கூறியதாவது...
கடந்த சில நாட்களாக மாநில அமைச்சர், சம்பந்தபட்ட துறை அலுவலர்கள் உள்ளிட்டவர்களை தொடர்புகொண்டு தண்ணீர் கொண்டுவருவதற்குரிய முயற்சியில் தாம் மும்முரமாக ஈடுபட்டு வந்ததாகவும், அதன் அடிப்படையில் இன்று மதியம் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சரோஜா மலைஅய்யன் அவர்கள் தண்ணீர் குறைந்து காணப்படும் செக்கடி குளம், வறண்டு காணப்படும் மரைக்கா குளம் ஆகியவற்றை ஆய்வு செய்ய வந்துள்ளதாகவும், இன்னும் ஒரு சில தினங்களில் வறண்டு காணப்படும் அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் வந்தடையும் என்ற மகிழ்ச்சிக்குரிய தகவலையும் நம்மிடம் தெரிவித்தார்.

மேலும் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் வரும் அதிரை பேருந்து நிலையம் - மகிழங்கோட்டை சாலையை சீரமைக்க பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சரோஜா மலைஅய்யன் அவர்கள் ரூபாய் 61 இலட்சம் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், விரைவில் இந்த பணிகள் ஆரம்பிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

நீண்ட காலமாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் வரும் வண்டிப்பேட்டை- சிஎம்பி லேன் வழியாக செல்லும் நடுவிக்காடு - மிலாரிக்காடு கிராம இணைப்பு சாலையை சீரமைக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எனது கோரிக்கையை விரைவில் நிறைவேற்றிதருவதாக வாக்குறுதி அளித்திருப்பதாகவும் நம்மிடம் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

நாமும் நமது பங்குக்கு அதிரை பொதுநலன் சார்ந்த பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வரும் அதிரை அப்துல் அஜீஸ் அவர்களுக்கு நன்றியையும் வாழ்த்துகளையும் அன்போடு தெரிவித்துக்கொண்டு அங்கிருந்து விடைபெற்றோம்.

களத்திலிருந்து அதிரை நியூஸ் குழு

குறிப்பு : இந்த பணிகள் குறித்து பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சரோஜா மலைஅய்யன் மற்றும் அதிரை அப்துல் அஜீஸ் ஆகியோர் நமக்களித்த விரிவான தகவல்கள் அடங்கிய காணொளியை வாசகர்களின் பார்வைக்காக விரைவில் தளத்தில் கொண்டு வருகிறோம்.


சிஎம்பி வழி சாலையை மறுசீரமைப்பது குறித்து கேட்டறிகிறார்.

சிஎம்பி வாய்க்காலிலிருந்து எட்டிபார்க்கும் தூரத்தில் உள்ள மரைக்கா குளத்திற்கு தண்ணீர் செல்லும் வழியை பார்வையிடுகிறார்.

வறண்டு காணப்படும் மரைக்கா குளத்தை பார்வையிடுகின்றனர்

செக்கடி குளத்தில் தண்ணீர் முழுவதும் நிரம்பாமல் இருப்பதை பார்வையிடுகின்றனர்.

6 comments:

  1. Ennatha solrathu, ella puhalum iraivanukay..yaar saithalum saripa..vela nadantha sari..

    ReplyDelete
  2. நமதூரில் தண்ணீரை வைத்து அரசியல் பண்ணுவதோடு ஊரையும் தெருக்களையும் பிரித்துப்பார்க்கும் அவலங்களும் வேனதனைகுரிய விஷயம் .பருவமழை பொய்த்ததால் காவேரியில் இருந்து போராடி பெற்ற இந்த தண்ணீர் முதலில் வியசாயத்திற்கு மட்டுமே பயன் படுத்தபடுகிறது மேலும் கடலில் கலக்கும் உபரி நீர் மட்டுமே குளங்களுக்கு விடப்படும் .குளத்திற்கு தண்ணீர் வேண்டும் என்ற அறிவிப்புக்களும் அதன் பின் குளத்திற்கு தண்ணீர் வந்துவிட்டது என்ற நன்றி அறிவிப்புக்களும் அரசியல் வாதிகளின் முதிர்வற்ற விளம்பரங்களும் சுற்றி உள்ள கிராமத்து மக்களை உஷார் படுத்தியதோடு அந்த தண்ணீரை அவர்கள் இடைமடை செய்து அவைகள் விவசாயத்திற்கு திருப்பிவிடும் நிலையும் ஏற்பட்டுவிட்டது .

    ReplyDelete
  3. யார் தண்ணீர் கொண்டுவந்தாலும் குளத்தையும் நிரப்பினால் சரி இதுதான் என்னுடைய கருத்தும் நான் சார்ந்துள்ள SDPI கட்சியின் கருத்தும்.

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அழைக்கும்.
    முயற்ச்சி செய்து தண்ணிரை கொண்டு வந்தால் சந்தோசம் தான், முயற்சிக்கு பாராட்டுக்கள், ஒற்றுமையுடன் வாழ்வோம், இன்ஷா அல்லாஹு வெற்றி நமக்கே, ஆமீன்..

    ReplyDelete
  5. ஒற்றுமையோடு குளங்களை நிரப்புங்கள் அடுத்ததாக ஒரு முக்கிய வேலை இருக்கிறது அதிரை நியூஸ் வாயிலாக அறியப்படுத்துகிறோம் [நிரம்பி வழியும் குளங்களை காண ஆவலாய் இருக்கும் அதிரையர்களில் நானும் ஒருவன்

    ReplyDelete
  6. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி. .

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.