அதிரை நகர காங்கிரஸ் தலைவர் M.M.S. அப்துல் கரீம் தலைமையிலும், நகர செயலாளர் சிங்காரவேலு, பட்டுக்கோட்டை சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் அதிரை மைதீன், நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன், மூத்த காங்கிரஸ் உறுப்பினர் ஜலீலா ஜுவல்லரி முகைதீன் ஆகியோர் முன்னிலையில் இனிதே துவங்கியது.
பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் அதிரை நகர காங்கிரசார் ஏராளமானோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
இதையடுத்து அதிரையின் முக்கிய பகுதிகளுக்கு பேரணியாக சென்று அங்கே அமைந்துள்ள காங்கிரஸ் கொடிக்கம்பத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் இறுதியாக 8 வது வார்டு இளைஞர் காங்கிரஸ் தலைவர் சேனாமூனா ஹாஜா முகைதீன் நன்றியுரை வழங்கினார்.
அருமையாக புகைப்படத்தினை தந்த அதிரை நியூஸ்க்கு நன்றிகளும் மற்றும் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
ReplyDeleteகுடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteOk
ReplyDelete