.

Pages

Saturday, January 11, 2014

மணல் குவாரிகளை திறக்க இளைஞர் காங்கிரஸார் கோரிக்கை !

பட்டுக்கோட்டை அருகே சேண்டாக்கோட்டை, ராஜாமடம் பகுதிகளில் மணல் குவாரிகளைத் திறக்க வேண்டுமென மாநில அரசுக்கு இளைஞர் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
பட்டுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடும் மணல் தட்டுப்பாடு காரணமாக பட்டுக்கோட்டை தொகுதியில் அரசு சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு கட்டுமானப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் கட்டடப் பொறியாளர்கள், தொழிலாளர்கள் பலர் வேலையிழந்துள்ளனர்.
எனவே, இப்பிரச்னையில் ஆட்சியர் தலையிட்டு, சேண்டாக்கோட்டை, ராஜாமடம் பகுதியில் உடனடியாக மணல் குவாரிகளைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டுக்கோட்டை நகரில் நடக்கும் சாலை விரிவாக்கப் பணிகளை நெடுஞ்சாலைத் துறையினர் விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் அதிரை மொய்தீன் கனி தலைமை வகித்தார். செயலர்கள் செந்தில், கார்த்தி, அசாருதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னாள் தலைவர் ஏ.கே. குமார் வரவேற்றார். ஜி. மோகன்ராஜ் நன்றி கூறினார்.

செய்தி : தினமணி

3 comments:

  1. நல்லதோர் முயற்சி வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி. .

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.