ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு மீன்களின் வரத்து அதிகமாகவே காணப்படும். இதற்கு முன்பு இங்கு விற்பனை செய்யப்பட்ட தேசப்பொடி, கொடுவா மீன்கள், திருக்கை மீன்கள், தாளன் சுறா, இறால்கள் ஆகியன மிகவும் மலிவாக விற்பனை செய்யப்பட்டன.
அந்த வரிசையில் கடந்த சில நாட்களாக மீனவர்களின் வலைகளில் பண்ணா மீன்கள் அதிகளவில் பிடிபடுவதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் வரத்து அதிகமாக காணப்படுகின்றன. மருத்துவ குணம் கொண்ட இவ்வகை மீன்கள் மிகவும் ருசியாக இருக்கும் என்பதால் அதிரையர்கள் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள். இந்த மீனின் விலை கிலோ 150 ரூபாயிலிருந்து 200 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
மலிவாக கிடைப்பதால் மீன் பிரியர்கள் போட்டிபோட்டு வாங்கிச் செல்கின்றனர். விரைவாக விற்பதுடன், நிறைவான லாபம் கிடைப்பதால் வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
மாஷா அல்லாஹ் - எல்லா புகழும் இறைவனுக்கே
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
ஆ .............பண்ணா மீனு ........
ReplyDeleteபண்ணா மீனு மிகவும் புகழ்பெற்ற மீனாச்சே, என்ன எது? யாருக்கும் விருப்பம் இல்லையோ.
ReplyDeleteபண்ணா மீனோட ஒருதுண்டு கால கருவாடு, நாலைந்து இறால் சேர்த்து மிளகுதண்ணி வைத்து சாப்பிட்டு பாருங்கள், சும்மா அப்படி சுவையாக இருக்கும், அதில் சிறிதளவு மாசித் தூளையும் சேர்த்துப் பாருங்கள்.
பண்ணா மீனுக்கு மவுசு எகிறிவிடும்.
பண்ணா மீனு மண்டையை இன்று உப்பில் வைத்து நாளை சமைத்தால் அது எல்லாத்தைவிட சூப்பரா இருக்கும்.
Deleteபண்ணா மீனை உப்பிட்டு சிறிதளவு மஞ்சள் தூள் இட்டு நான்றாக அவித்து எடுத்து அதில் உள்ள முட்களைஎல்லாம் நீக்கிவிட்டு சதையை தனியாக எடுத்து காலிப்லவரில் சேர்த்து சமைத்து சாபிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.
Deleteபரவாயில்லையே. ஊரு பண்ணா மீன சாப்புட்டு ரொம்பநாளாச்சி. பண்ணா மீனு துபைல வேல ஏறிப்போச்சிங்கோ மனு (4கிலோ) 15, 20திரஹத்துக்கு வாங்குன பண்ணா மீனு இப்போ நம்ம ஆளுவோ அதிகமா விரும்பி சாப்புடுரத்துனாலெ இப்போ மனு 70 திரஹத்துக்கு விக்கிதுங்கோ.!
ReplyDeleteஇதுனாலத்தான் கந்துரி அன்று பெரிய பண்ணா மீனை செய்து ஊர்வலம் விடுறான்
ReplyDelete