.

Pages

Friday, January 31, 2014

மரண அறிவிப்பிற்கு நன்றி அறிவிப்பு !

அன்புக்குரிய அமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பு [ AAF ]  நிர்வாகிகள் மற்றும் அனைத்து சகோதரர்கள்-சகோதரிகள் மற்றும் அதிரை வலைத்தளங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.

கடந்த பத்து தினங்கள் என் மாமா நெய்னா முஹம்மது அவர்கள் திடீர் சுகவீனப்பட்டு,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நாட்டப்படி மரணமடைந்தது வரை, எங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் நீங்கள் அனைவரும் காட்டிய பாசம்,நேசம்,உபசரிப்பு,உதவி,துஆ இப்படி எங்களை ஆறுதல் படுத்தினீர்கள்.மருத்துவமனை,ஜனாஸா தொழுகை,நல்லடக்கம் என்று பெருந்திரளாக கலந்து கொண்டீர்கள்.உங்கள் வேலைகளை ஒதுக்கினீர்கள்,தூக்கம் தொலைத்தீர்கள்.இப்படி எல்லா வகையிலும் ஆறுதல் தந்தீர்கள், இதற்கு கைமாறு கிடையாது.மனிதனுக்கு நன்றி செலுத்தாதவன், இறைவனுக்கு நன்றி செய்ய முடியாது.

இதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கும்,உங்கள் குடும்பங்களுக்கும் இரண்டு உலகிலும் வெற்றி தருவானாக,ஆமீன்.

இன்ஷா அல்லாஹ்,இன்னும் இந்த அமைப்பை அமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பு [ AAF ]  கட்டி எழுப்ப வேண்டும்.நாமும்,நம் சந்ததிகளும் பயன் பெற வேண்டும்,இன்ஷா அல்லாஹ் முஸ்லிமாக வாழ்ந்து,முஸ்லிமாக மரணிக்க வேண்டும்.ஆமீன்.

மேலும் அதிரை நியூஸ், அதிரை எக்ஸ்பிரஸ், அதிரை போஸ்ட் போன்ற தளங்கள் மரணம் பற்றிய செய்தியை வெளியிட்டு,உலக முழுதும் உள்ள அதிரை மக்களின் துவாக்கள் கிடைக்க காரணமாக அமைந்தன,அவைகளுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்னாரின் மக்ஃபிரத்துக்கு துவா செய்யுங்கள்.

அல்லாஹ் மட்டுமே என்றென்றும் உயிரோடு இருப்பவன்,நாம் அனைவரும் மரணமடைய வேண்டியவர்களே.அல்லாஹ்வுக்காக,இந்த மரணத்தை-இழப்பை பொருந்திக் கொண்டோம், அல்லாஹ் நமக்கு முன் சென்ற அன்னாரையும்,பிறகு போக போகிற நம்மையும் மன்னிப்பானாக,ஆமீன்.

அர. அப்துல் லத்தீப் 

5 comments:

  1. அல்லாஹ் மட்டுமே என்றென்றும் உயிரோடு இருப்பவன்,நாம் அனைவரும் மரணமடைய வேண்டியவர்களே.அல்லாஹ்வுக்காக,இந்த மரணத்தை-இழப்பை பொருந்திக் கொண்டோம், அல்லாஹ் நமக்கு முன் சென்ற அன்னாரையும்,பிறகு போக போகிற நம்மையும் மன்னிப்பானாக,ஆமீன்.

    ReplyDelete
  2. //அல்லாஹ் மட்டுமே என்றென்றும் உயிரோடு இருப்பவன்,நாம் அனைவரும் மரணமடைய வேண்டியவர்களே.அல்லாஹ்வுக்காக,இந்த மரணத்தை-இழப்பை பொருந்திக் கொண்டோம், அல்லாஹ் நமக்கு முன் சென்ற அன்னாரையும்,பிறகு போக போகிற நம்மையும் மன்னிப்பானாக,ஆமீன். //

    உயிருக்கும், உயிர் அற்றதுக்கும் அப்பார்ப்பட்டவன். பிறப்பும் இறப்பும் அற்றவன். எதிலும் கட்டுப்படாதவன். எதுவும் அவனன்றி இல்லை.

    எங்கிருந்து வந்தோமோ அங்கேயே மீள்கின்றோம்.

    //.மனிதனுக்கு நன்றி செலுத்தாதவன், இறைவனுக்கு நன்றி செய்ய முடியாது//

    ReplyDelete
  3. அன்னாரின் மக்ஃபிரத்துக்கு துவா செய்யுங்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.