ஆதார் அடையாள அட்டை திட்டத்தின் கீழ், சமையல் கியாஸ் சிலிண்டருக்கான மானிய தொகையை பயனாளிகளின் வங்கி கணக்குக்கு நேரடியாக செலுத்தும் முறையை 18 மாநிலங்களில் உள்ள 289 மாவட்டங்களில் மத்திய அரசு அமல்படுத்தியது.
இந்த திட்டத்தின்படி, சமையல் கியாஸ் சிலிண்டர் வாங்குவோர் சந்தை விலையான 1,258 ரூபாய் கொடுத்து சிலிண்டரை வாங்கிக்கொள்ளவேண்டும். அந்த சிலிண்டருக்கு உரிய மானிய தொகையை அவர்களுடைய வங்கி கணக்கில் அரசு செலுத்திவிடும். இதில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டதால், இந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்த சூழ்நிலையில், பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நேற்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் இதுபற்றி வீரப்ப மொய்லி நிருபர்களிடம் கூறுகையில்;
ஆதார் அடையாள அட்டையின் அடிப்படையில் சமையல் கியாஸ் சிலிண்டருக்கான மானிய தொகையை பயனாளிகளின் வங்கி கணக்குக்கு அனுப்பி வைக்கும் திட்டத்தை ரத்து செய்வது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என்று தெரிவித்தார்.
எனவே பொதுமக்கள் யாரும் ஆதார் அட்டைக்காக அலைந்து தங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் விவரங்களுக்கு,
Z. முஹம்மது தம்பி BA., BL
9865997450
இதுபோன்ற நிகழ்வுகளை இன்றைய சூழ்நிலையில் எல்லோரும் ஒற்றுமையாக சேர்ந்து செய்தால் வியக்கத்தக்க மக்களிடம் வீறுகொண்டு வெளிச்சமாய் விளங்கும்
ReplyDeleteஇதுபோன்ற நிகழ்வுகளை இன்றைய சூழ்நிலையில் எல்லோரும் ஒற்றுமையாக சேர்ந்து செய்தால் வியக்கத்தக்க மக்களிடம் வீறுகொண்டு வெளிச்சமாய் விளங்கும்
ReplyDelete