.

Pages

Thursday, January 23, 2014

ஆதார் அட்டை தொடர்பாக வழக்கறிஞர் Z. முஹம்மது தம்பியின் முக்கிய தகவல் !

மதுரை, ஜன. 23 :
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த வக்கீல் ஆனந்தமுருகன், மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:
மத்திய அரசு ஆதார் அட்டை வழங்குவதற்காக ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கி வெளிநாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த நிறுவனம் ரேகை, கருவிழி போன்றவைகளை அடையாளமாக கொண்டு ஆதார் அட்டைகளை வழங்கி வருகிறது.

ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், ஓட்டுநர் உரிமம் போன்றவற்றை பொதுமக்கள் பல்வேறு பயன்பாட்டிற்கும் அடையாள அட்டையாக பயன்படுத்தி வருகின்றனர்.

எனவே ஆதார் அட்டை கட்டாயம் இல்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்து விட்டது. இந்த தீர்ப்புபடி ஆதார் அட்டை கேட்கக்கூடாது. ஆனால் மானிய விலையில் கியாஸ் சிலிண்டர் வழங்குவதற்கு ஆதார் எண் கேட்டு சமையல் எரிவாயு நிறுவனங்கள் வற்புறுத்தி வருகின்றன. இதனால் பொதுமக்கள் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர்.

ஆதார் அட்டை கேட்பது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு புறம்பானது. அதனை கேட்கும் சமையல் எரிவாயு நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். ஆதார் அட்டை கேட்டு கட்டாயப்படுத்தக்கூடாது என சமையல் எரிவாயு நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் சுதாகர், வேலுமணி ஆகியோர் விசாரித்து ஆதார் அட்டை கேட்பதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மானிய விலையில் கியாஸ் சிலிண்டர் பெற ஆதார் எண் கேட்கக்கூடாது என கியாஸ் நிறுவனங்களுக்கு இடைக்கால தடை விதிப்பதாக தீர்ப்பில் கூறி உள்ளனர். மேலும் வழக்கின் முக்கிய மனு மீதான விசாரணை 29–ந்தேதிக்கு தள்ளி வைப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் விவரங்களுக்கு,
Z. முஹம்மது தம்பி B.A.,B.L.,
9865997450

6 comments:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    இப்படி செய்திகள் பல வழிகளிலும் மக்களை வந்து அடைந்தாலும், இந்த ஊரில் உள்ள சில இடைத்தரகர்கள் வலுக்கட்டயாமாக பெண்களிடம் அச்சுறுத்தலை உண்டாக்கி, அந்த பெண்கள் இந்தச் செய்தியை காட்டுத் தீ போல பரப்புகின்றனர்.

    எதற்கும் நிதானம் தேவை.

    நமது நாட்டில் இன்னும் முக்கால்வாசிப்பேருக்கு இந்த ஆதார் அட்டை கிடைக்கவில்லை தகவல்களும் வெளிவருகின்றது.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
    Replies
    1. ///இப்படி செய்திகள் பல வழிகளிலும் மக்களை வந்து அடைந்தாலும், இந்த ஊரில் உள்ள சில இடைத்தரகர்கள் வலுக்கட்டயாமாக பெண்களிடம் அச்சுறுத்தலை உண்டாக்கி, அந்த பெண்கள் இந்தச் செய்தியை காட்டுத் தீ போல பரப்புகின்றனர்///.

      இவ்வளவு வசதிகள், தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட காலத்திலும் நாம் விழிப்புணர்வடையாமல் உள்ளோம்....

      Delete
    2. Muhammad BABL அவர்களே!
      வீட்டுக்கு ஒரு ஆம்பிள்ளை ஆள் இல்லையே, இப்போ அதுதானே குறை, இருக்கின்ற பெரிசுகளை இக்கால இளசுகள் சண்டை போட்டு வெளியே விரட்டாமல் விரட்டி விடுகின்றனர்.

      இதுக்கு ஒரு முடிவு வேண்டாமா? ஆதார் அட்டையை பிறகு பார்ப்போம்.

      Delete
  2. உச்சநீதி மன்றத்தீர்ப்பை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளாததன் காரணம் என்ன..?? விபரம் தெரிந்தால் அறியத் தரவும்.

    நமதூரில் நிறையப் பேருக்கு அதார் அட்டை இன்னும் பதியப் படாமல் உள்ளது. ஆதலால் இனிமேல் கேஸ் சிலிண்டர் பெறுவதில் பெரும் சிரமமாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. கேஸ் சிலிண்டரா?
      மாப்பிள்லை கூட ஈசியாக கிடைத்துவிடும். ஆனால் கேஸ் சிலிண்டர் கிடைக்காமல் போய்விடுமோ.

      Delete
  3. கியாஸ் இல்லேன்னா விரஹு அடுபுல சமைங்க காக்க. உங்க முன்னோர்கள் கியாஸ்லய சமைச்சாங்க? ஆதார் அட்டை பெரிய பிரச்னை காக்க..

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.