.

Pages

Friday, January 24, 2014

அதிரை எஸ்டிபிஐ கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்து அலி அக்பர் விடுவிப்பு !

அதிரை நடுத்தெருவை சேர்ந்தவர் அலிஅக்பர். சமூக ஆர்வலரான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிரை நகர எஸ்டிபிஐ கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு கட்சி பணியாற்றி வந்தார். இவருக்கு அதிரை நகர பொறுப்பாளர்களால் நடுத்தெரு கிளையின் துணைத்தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்சி கொள்கைக்கு எதிராக செயல்பட்டதாக கூறி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டதாக அதிரை நகர எஸ்டிபிஐ கட்சி அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகுறித்து அறிய அலிஅக்பர் அவர்களை தொடர்பு கொண்டபோது, நீக்கப்பட்டதை தான் ஏற்றுக்கொள்வதாக நம்மிடம் தெரிவித்தார்.

2 comments:

  1. ஏம்பா சும்மா கிடந்த ஆள போய் பதவி கொடுத்து பெரிய ஆளா ஆக்கிப்புட்டு இப்ப வெலக்கிவுடுரீங்க. அதான் இன்னக்கி நியூஸ்ல கூட பார்த்தேன், ஆம் ஆத்மி கட்சியில ராகுல் காந்தி, நரேந்திர மோடிலாங்கூட உறுப்பினரா பதிவு செஞ்சிக்கிராங்க. அதுமாதிரி இவரும் பதிவு பண்ணிருப்பாரு. அந்த பெரிய பெரிய கட்சிகள்ளாங்கூட அவங்கள கட்சியவுட்டு நீக்கல, அப்ப நீங்க மட்டும் இவர நீக்குறது நியாயமா?

    ReplyDelete
  2. Dear readers, Kindly do not waste our times.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.