.

Pages

Thursday, January 9, 2014

ஊர் கூடி தேர் இழுப்போம் !?

அயலகம் சென்றோம்
அயராது உழைத்தோம்
அதிரையின் நினைவுகளில்
துக்கத்தில் விழித்தோம்

ஆண்டுகள் சென்றது
ஆணையும் வந்தது
ஆகாயம் வழியே
தாய் நாடு
வந்தோம்

தாயை பார்க்க
தாரத்தை பார்க்க
ரயிலேறி வந்தோம்.
வீடுவரை செல்ல
குதிரை வண்டி
பயணம்
கட்டாயம் உண்டு

தாயின் உபசரிப்பு
தந்தையின் புன்சிரிப்பு
நலன்களை பகிர
சூடான இஞ்சி Tea

புது டவலும்
உம்மா தந்த
வெள்ளை வேட்டியும்
மண சௌக்காரமும்
சுருட்டப்பட்டு
செக்கடிக்குளம்
விரைந்தோம்

பற்பசையோடு
பல்லிளித்தான்
பால்ய நண்பன்

குட்டிக்கரனமிடும்
குட்டிப்பசங்க கூட்டம்
தொந்தரவு தங்காது
வீசப்படும் உடுப்புகள்
பெருசுகளின்
ஆவேசம்!

இன்று !?

புகை விடும் ரயிலும்
புகையோடு
மறைந்தது
அது தடம் பதித்த
தடமும் மாயமாய் போனது

இனி கனவில் கூட
வராமல் போனது
குதிரைவண்டி
பயணம்

வராமல் போன
தண்ணீரும் குளங்களை
நிறைத்தது
வாங்களேன் குளிக்கலாம்

நீருக்கெடுத்த
முயற்சி
ரயிலுக்கும்
எடுக்கலாம்

ஊர் கூடி
தேர் இழுத்தால்
தேர் வந்து
சேராமலா போகும்
இலக்கை நோக்கி...
மு.செ.மு.சபீர் அஹமது

6 comments:

  1. அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள் சார்பில்லாமல், தான் சார்ந்த பகுதி என்ற எண்ணமில்லாமல் ஊர் நலனே மேல் என்ற அடிப்படையில் ஒற்றுமையுடன் செயல்படக்கூடிய சமூக ஆர்வலர்களை தெருவுக்கு மூன்று பேர் வீதம் தேர்ந்தெடுத்து செயல்பட்டாலே நினைத்ததை நாம் சாதித்து காட்டலாம்

    அதுவும் இப்ப உள்ள காலகட்டம் தேர்தல் நடக்ககூடிய காலமென்பதால் நமது கோரிக்கைகள் விரைவாக நிறைவேறகூடிய வாய்ப்புகள் ஏராளம்.

    ReplyDelete
  2. களம் கண்டு
    முயற்சி வென்று
    குளம் நீர் கண்டு
    இன்னும் உண்டு ஒற்றுமையில்

    என்பதற்கு நல்ல கவிதை.

    நீயா நானா அரசியல்வாதிகளே நீருக்கு முன் வேண்டாம் விளையாட்டு!

    ஒற்றுமையில் நீர் நிரம்ப கண்டு விளையாட்டை வைத்துக் கொள்வோம் குளத்தில்!

    ReplyDelete
  3. ஊர் கூடி
    தேர் இழுத்தால்
    தேர் வந்து
    சேராமலா போகும்
    இலக்கை நோக்கி...


    ஆதங்கம் உங்களிடமும்
    ஆம்மாம் எங்களிடமும்.

    ஆனால்....?
    ஊரெல்லாம் தெருவாகி
    தெருவெல்லாம் குடும்பமாகி
    குடும்பமெல்லாம் கட்சியாகி
    கட்சியெல்லாம் நாற்காலித்தேடி
    நாற்காலியெல்லாம்....!
    வீசப்பட்டு உடைந்துவிட்டதே !

    தேர்தல் வந்தால்
    புதுப்புது எதிரிகள்

    ஒவ்வொருவரும்
    ஒற்றுமை என்னும் கயிறு
    பேசப்படும் !

    ஒவ்வொரு செயலிலும்
    துவேசம் தெறிக்கும்
    நல்லவைகள் எல்லாம்
    தீயவைகளாகப் பார்கப்படும்

    மனிதனாக மனிதன் வாழ
    மார்கம் வந்தும்
    மிருகமாக குதறிக்கொள்ளும்
    குனாம்தான் இன்று
    குடியேறிவிட்டது.

    ஆனாலும்....!
    ஒற்றுமை என்னும் கயிறு....
    பேசப்படும் !

    இன்னும் கொஞ்ச நாட்களில்
    தேடப்படும் ....?
    யாரை....?
    மனிதனை !
    அன்று அவன்
    அதிசயப்பொருள் !

    ReplyDelete
  4. தாங்களின் ஏக்கக் கவிவரிகள் எல்லோரையும் சிந்திக்கவைக்கும்.

    என்று தணியும் இந்தத் தரணியின் தாகம். என்று தீரும் இந்தப்பிரிவினைத்துயரம்.

    ReplyDelete
  5. செடியன் குளமும்
    செக்கடிக் குளமும்
    விடியும் வேளையில்
    விசில் சத்ததத்துடன் கம்பனும்...
    இல்லாத ஊர; ஆயினும்
    இழுப்போம் ஒற்றுமைத் தேர்
    நில்லாமல் உழைக்கும்
    நீங்களும் பாராட்டுக்குரிய நபர்!

    ReplyDelete
  6. பதிவுக்கு நன்றி.

    ஊர் ஒன்றுகூடி தேர் இழுப்பதை பகல் கனவில் காணும்போது சந்தோஷமாக இருக்குது, இழுப்பவர்கள் கையில் வலிமையான கயிர் இல்லையே, அந்த வலிமையான கயிற்றை தேடித் தேடி அழைகின்றனர், இன்றுவரை கிடைத்தபாடில்லை.

    எல்லோரும் நல்ல அறிவுடையோர், செல்வம் உடையோர், சிறந்த சிந்தனை உடையோர், இருந்தும் என்ன பயன்? நல்ல பெருந்தன்மை கொண்ட மனம் இல்லையே!!

    யோசனை சொல்ல ஒரு கோடி பேர் உண்டு, இருந்தும் என்ன பயன்? செயலில் இல்லையே!!!

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.