.

Pages

Monday, January 27, 2014

இட ஒதுக்கீடு போராட்டத்தில் பங்கேற்க அதிரையில் பணிகள் மும்முரம் !

இஸ்லாமியர்களுக்கு அரசின் வேலை வாய்ப்பு , கல்வி ஆகியவற்றில் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி நாளை [ 28-01-2014 ] காலை 11 மணியளவில் திருச்சியில் நடைபெற இருக்கும் சிறை செல்லும் போராட்டத்திற்கான பணிகள் அதிரையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை நிர்வாகிகள் ஒவ்வொரு மஹல்லா ஜமாத்தினரையும், பொதுமக்களையும் நேரடியாக சந்தித்து அழைப்பு விடுத்து வருகிறார்கள்.

இதற்காக பல குழுக்களாக பிரிந்து ஒவ்வொரு தெருவிலும் உள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று இட ஒதுக்கீட்டின் அவசியம் குறித்து விளக்கி அவர்களை திருச்சியில் நடக்க இருக்கும் போராட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்து வருகிறார்கள். 

கடந்த சில நாட்களாக வாகனத்தில் கட்டப்பட்ட ஒலிபெருக்கின் மூலம் நகரின் முக்கிய பகுதிகளில் அறிவிப்பும், துண்டு பிரசுரங்கள் மூலமாகவும் பிராச்சாரத்தை மேற்கொண்டனர். மேலும் நகரின் முக்கிய பகுதிகளில் ஆங்காங்கே ப்ஃளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. போராட்டத்திற்கு சென்று வருவது குறித்து அதிரை கிளையினர் அவ்வபோது ஆலோசனை அமர்வுகளும் நடத்தி வந்தனர்.

நாளை காலை 7 மணியளவில் அதிரை தக்வா பள்ளி அருகிலிருந்து வாகனங்கள் புறப்படுவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் பிராதான தெருக்களுக்கு வாகனங்களை அனுப்பி பொதுமக்களை ஏற்றிவர ஏற்பாடு செய்துள்ளனர். பெண்களுக்கு தனி வாகன வசதிகளும் ஏற்பாடு செய்துள்ளனர்.

திருச்சி போராட்டத்தில் பங்கேற்க உள்ளவர்களுக்கு வேண்டிய மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக இன்று மதியம் முதல் சமையல் வல்லூனர்கள் மும்முரமாக பணியாற்றி வருகின்றனர்.

தண்ணீர் பாக்கெட்கள், அவசர மருத்துவ முதலுதவி, அவசர தேவைக்கு போதுமான மருந்து மாத்திரைகள் உள்ளிட்டவை கிளையின் சார்பாக ஏற்பாடு செய்துள்ளனர்.





4 comments:

  1. வேலை வாய்ப்பில் இட ஒதிக்கீடு என்பது நமது ஜீவாதார உரிமை இதில் அனைத்து அமைப்புகளும் பாகுபாடு இன்றி கலந்து கொள்வது அவசியமான ஒன்று .போராட்டம் வெற்றி பெற அனைவரும் துஆ செய்யுவோம் ....ஆமீன் .

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் சென்று வெண்று வாருங்கள் மகாராமில்லாமல் ஒரு பெண்ணையாவது அழைத்து செல்ல வேண்டாம் சொர்கத்தில் இட ஒதுக்கீடு இல்லாமல் போய்விடும்

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் சென்று வெண்று வாருங்கள் மகாராமில்லாமல் ஒரு பெண்ணையாவது அழைத்து செல்ல வேண்டாம் சொர்கத்தில் இட ஒதுக்கீடு இல்லாமல் போய்விடும்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.