.

Pages

Wednesday, January 29, 2014

ஆதார் பதிவு எண் கட்டாயமில்லை ! கேஸ் உரிமையாளரை சந்தித்த எஸ்டிபிஐ கட்சியினர் தகவல் !

அதிரையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மானிய விலையில் கியாஸ் சிலிண்டர் வழங்குவதற்கு ஆதார் எண் கேட்டு சமையல் எரிவாயு நிறுவனம் பொதுமக்களிடம் பெற்று வந்தது. 

இது குறித்து உண்மை நிலையை அறிந்து கொள்வதற்காக அதிரை நகர எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக அதன் தலைவர் அப்துல் ரஹ்மான், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் நிஜாம் ஆகியோர் அடங்கிய குழுவினர்கள் கடந்த அன்று [ 23-01-2014 ] அதிரையில் இயங்கி வரும் இன்டேன் கேஸ் அலுவலகத்திற்கு சென்று அதன் உரிமையாளரிடம் பேசினார்கள். பேசிய வகையில் தற்போது ஆதார் பதிவு எண் கட்டாயமில்லை என்ற தகவலை தந்ததாக நம்மிடம் தெரிவித்தனர். 

இதையடுத்து எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக இந்த தகவலை அதிரை மற்றும் அதிரையை சுற்றி வாழக்கூடிய பொதுமக்கள் அறிந்துகொள்வதற்காக ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலமாக விளம்பரம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நேற்று அதிரை நகரில் ஆங்காங்கே ஒட்டப்பட்ட நோட்டீஸ்

9 comments:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    ஆதார் அட்டை தேவையா அல்லது தேவை இல்லையா? இது இன்னும் இழுபறியாகவே இருக்கின்றது, ஆதார் அட்டை கொடுத்து வங்கி மற்றும் கேஸ் நிறுவனத்தில் பதிந்தவருக்கு ரூபாய் 1255/- போட்டு பில் வருகின்றது, மானியத்தொகை நாண்டு நாட்களுக்குள் நுகர்வோர் வங்கி கணக்கில் வந்து விழுந்து விடுகிறது, இன்னும் பதியாதவர்களுக்கு எப்போதும்போல் பழைய விலைக்கே பில் வருது? காரணம் கேட்டால் மார்ச் 31.2014 வரை டைம் இருக்கு என்று சில பொது மக்கள் கூறுகின்றனர்.

    என்னமோ நடக்குது, என்னான்டு கேட்டால் பல்லை கடித்துக் கொண்டு ஒரு முறை முறைக்குது.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  2. யேன் ஜமாலாக்கா,

    உங்க அக்கவுன்ட்லே பணம் வுழுந்துருச்சா !? சொல்லவே இல்லே :)

    ReplyDelete
    Replies
    1. ஸ்டேட் பேங்கில் சில பேர்களுக்கு வந்திருக்கு, கனரா பேங்கில் சிலபேர்களுக்கு வந்திருக்கு.

      அதான் நான் சொன்னேனே.

      என்னமோ நடக்குது, என்னான்டு கேட்டால் பல்லை கடித்துக் கொண்டு ஒரு முறை முறைக்குது.

      Delete
  3. சில சமயம் சுகப்பிரசவம். சில சமயம் சிஸ்சேரியன் ஆப்பரேசன். குழந்தை உண்டாகிட்ட வெளிவராமல் போகாது. மாதமாதம் டாக்டர் செக்கப் எல்லாம் செய்தாகிவிட்டது. அப்பவே டி என் சி செய்திருக்கணும். ஆனால் இல்லை. இப்ப எப்படியும் பிரசவம் பார்க்கணும். இல்லாவிட்டால் தாய்க்கும் பிள்ளைக்கும் பாதிக்கும். மருந்து கடைக்கு ஜாலிதான்.
    உண்மை எது பொய் எதுன்னு ஒன்னும் தெரியலே
    நம்ம கண்ணே நம்மாலே நம்பமுடியலே.
    அரசியல் கச்சேரி. பாவம் அப்பாவிகள் மக்கள் காதுகள் கிழியுது.
    நல்லவர் போர்வை எல்லோருக்கும் தேவைப்படுது. அதன் வெளிச்சத்தில் பூச்சிகள் மயங்கி விழுந்து மடியுது. இப்ப எல்லாமே பூச்சியாகிடுச்சு. பூச்சிகள் படையெடுத்தால் பாவம் என்ன செய்வான் மனிதன் ? கொஞ்ச நாளைக்கு ஓடி ஒழிய வேண்டியதுதான்....ஹீ ஹீ ஹீ......ஹீ ஹீ ஹீ....சப்தமாகக்கூட சிரிக்கமுடியலே.

    ReplyDelete
  4. நாட்டுல என்ன தான் நடக்குது. ஒண்ணுமே புரியல. அதார் அட்ட அவசியமுண்டு சொல்லும் கவுருமண்டுக்கு தெரியாதா இன்னும் நெறைய பேருக்கு அதார் அட்ட கெடக்கெலண்டு. அப்போ அதார் அட்ட கெடக்காதவங்க பாடு என்ன .?

    என்னமோ போங்க. இதெல்லாம் கேட்டா தலய சுத்துது.

    ReplyDelete
    Replies
    1. ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டர் ஐடி, ரேசன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், வீட்டு வரி, வாட்டர் பில், எலெக்ட்ரிக் பில், டெலிபோன் பில், மொபைல் போன் பில், வங்கி பாஸ்புக், இன்ஸ்யூரன்ஸ், வீட்டு பத்திரம், வீட்டு பட்டா, பிறந்த சான்றிதழ், படித்த சான்றிதழ், கேபிள் இணைப்பு பில், ஒரே கடையில் வாடிக்கையாக வாங்கும் மளிகை சாமான்கள் பில், காய்கறி பில், இறைச்சி மீன் இறால் பில், மருத்துவ பில், இவை எல்லாம் பக்காவாக ஒரே பெயரில் இருக்குதுங்க, இருந்தாலும் நம்புவதற்கு அரசு அதிகாரிகள் யோசிக்கின்றாங்கங்க. இந்தப் பிரச்னையை போக்க எல்லாத்தையும் ஒருங்கிணைத்து ஒரே அட்டையாக கொடுத்தால் எவ்வளவு வசதிங்க. யாருங்க யோசிப்பது? சொல்லுங்க.

      என்னமோ நடக்குதுங்க, நமக்கு ஒண்ணுமே புரியலைங்க, என்னான்டு கேட்டா அடிக்க வருதுங்க, 20-25வருடங்களுக்கு முன்னாடி இப்படி இல்லைங்க, எல்லாமே இப்பதானுங்க.

      Delete
  5. ஒன்னாகுறது ஒற்றுமைப்படுத்துறது அதாங்க இப்ப ரொம்ப கஷ்டம்.
    இதுக்கு எங்கேயாவது மாத்திரை இருக்க ?
    ஏன்ன, இப்ப எல்லாத்துக்கும் உடனடியாக தீர்வுகிடைக்கனும்னா வெள்ளைக்காரன் பணம் பறிக்கும் மாத்திரைத் தந்திரன் தான் வேணும்.

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அலைக்கும் ,வரஹ்''''
    அதார் கார்ட் இணைய தலத்தில் எடுப்பது எப்படி என்ற விபரம் கொஞ்சம் கொடுங்கள் ......நான்udai ல போய் டவுன்லோடும் பன்னிட்டேன் ஆனால் file openஆகள ஏதோ pdf file னு வருகிறது ..

    ReplyDelete
  7. pdf உங்களிடம் இருந்தால் file open ஆகும் என்று நினைக்கின்றேன். அல்லது WINDOWSல் SAVE pdf ல் SAVE பண்ணுங்கள். .

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.