.

Pages

Monday, January 20, 2014

அதிரையில் ஏற்பட்ட வாகன விபத்தில் திமுக ஒன்றிய பிரதிநிதி அன்சர்கான் காயம் !

அதிரை புதுத்தெரு பகுதியை சேர்ந்தவர் அன்சர்கான். இவர் தி.மு.கழக ஒன்றிய பிரதிநிதியாகவும், அதிரை பேரூராட்சியின் 11வது வார்டு உறுப்பினராகவும் இருந்து சமூகபணியாற்றி வருகிறார்.

இவர் இன்று மதியம் 2.30 மணியளவில் மிஸ்கீன் பள்ளி அருகே தனது இரு சக்கர வாகனத்தில் புறப்பட தயாரான போது எதிர்பாராத விதமாக ரிவர்ஸில் வந்த வாகனம் இவர் மீது மோதியது. இதில் கால், முதுகு தோல்பட்டையில் காயமேற்பட்டதை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஹிமாயத்துல் இஸ்லாம் சங்க துணைத்தலைவர் குலாப்ஜான் அன்சாரி மற்றும் அன்சர்கான் குடும்பத்தினர்கள், நண்பர்கள் உடனிருந்து கவனித்து வருகின்றனர். சம்பவம் கேள்விப்பட்ட தி.மு. கழக முன்னோடிகள் உள்ளிட்ட ஏராளமானோர் காயமடைந்த அன்சர்கானை நலம் விசாரித்து வருகின்றனர்.


4 comments:

  1. சகோதரர் அன்சார் கான் அவர்கள் உடல்நிலை நலமடைய இறைவனிடம் துவா செய்கிறேன்...

    ReplyDelete
  2. யா அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து உடல்நலம் பெற அருள்புரிவாயாக....ஆமீன் .......

    ReplyDelete
  3. தம்பி அன்சார் கான் அவர்கள் உடல்நிலை நலமடைய இறைவனிடம் துவா செய்கிறேன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.