ஏற்கனவே கோடை விடுமுறைக்காலங்களில் இளைஞர்களுக்காக இந்நிகழ்ச்சி தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நடத்தப்பட்டாலும், வெளிநாடடில் வசிக்கும் பெற்றோர்கள் தம் பிள்ளைகளை தம் தொட்டில் பூமியில் அரசு உயர் அதிகாரிகள் பதவியில் வீற்றிருக்கும் விதமாக அவர்களுக்கு ஊக்கம் மற்றும் விழுப்புணர்வு ஏற்படுத்த பெற்றோர்களுக்காக நடத்தப்பட முதல் நிகழ்ச்சி இதுவாகும்.
இதில் கலந்துகொண்டு பவர்பாயிண்ட் மூலம் கலந்துரையாடல் செய்த மவுலானா ஷம்சுதீன் காசிமி அவர்கள் மிகச்சிறப்பாக உரையாற்றி அரபிய தேசத்திற்கு இனி உங்கள் பிள்ளைகளை பணிக்கு அனுப்பாதீர்கள் என்ற கோரிக்கையுடனும் நம் சமுதாயம் அனைவரும் அரசு உயர் அதிகாரிகள் கல்வியைக் கற்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஊட்டினார்.
இதில் கலந்துகொண்ட பெற்றோர் அனைவரும் இந்நிகழ்ச்சி குறித்து பெருமிதம் அடைந்ததோடு ஜித்தாவில் நடந்த மிக சிறந்த நிகழ்ச்சிகளில் ஒன்று என இதனை பாராட்டினர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டினை.. சகோ.அதிரை ரஃபியா, சகோ. ஹாஜா முகைதீன், சகோ.நூருல் அமீன், சகோ.அப்துல் அஜீஸ் மற்றும் ஷரஃபிய்யா நண்பர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இரவு உணவுடன் நிகழ்ச்சி சிறப்பாக நிறைவுற்றது.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.