தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் சேக் முகமது. இவரது மகன் வஜீர் அலி ( வயது 41 ). விளையாட்டு வீரரான இவர் பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் துப்பாக்கி சுடும் போட்டிகளில் ஆர்வமாக கலந்துகொண்டு வருகிறார்.
இந்த நிலையில் கோவை ரைபிள் கிளப் சார்பில் 42-வது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி கோவை காவலர் பயிற்சி மையத்தில் இன்று தொடங்கியது. போட்டியை கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிகரன் மற்றும் மாநகர காவல் ஆணையர் அமுல்ராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் 10 மீட்டர் தூரம் குறிபார்த்து சுடும் போட்டியில் வஜீர் அலி கலந்து கொண்டு விளையாடி வருகிறார். அதிரை வரலாற்றில் முதன் முறையாக ஒரு வீரர் மாநில அளவில் நடைபெறும் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்டு விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
இதில் 10 மீட்டர் மற்றும் 50 மீட்டர் தூரம் குறிபார்த்து சுடுவது உள்ளிட்ட போட்டிகளில் ஏர்கன், ஏர்பிஸ்டல், ரைபிள், பிஸ்டல் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. இந்த போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் அகில இந்திய அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.





Masha allah😊😊😊
ReplyDeleteMay Allah shower his mercy and grand him victory here and here after....
Mashallah I proud to saying am his brother. All the very best. May Allah bless you always ☺☺
ReplyDeleteMasha Allah! Nice to see and hear this news and I look forward for the All India level and even in international levels also! Have a prosperous future! It's our proud !
ReplyDelete