ஒரத்தநாடு வட்டம், ஈச்சங்கோட்டை கால்நடை பெருக்குப் பண்ணையில், பட்டுபோன 135 மரங்களை வருகின்ற 04.01.2017 அன்று பண்ணை வளாகத்தில் பொது ஏலமிடப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியது:
ஒரத்தநாடு வட்டம், ஈச்சங்கோட்டை கால்நடை பெருக்குப் பண்ணையில் பட்டுப்போன 135 மரங்கள் பொது ஏலம் அரசு விதிமுறைகளின்படி பகிரங்கமாக நடத்தப்படும். இப்பண்ணையில் உள்ள 135 பட்டுப்போன மரங்களை மட்டும் கையகப்படுத்திக் கொள்வதற்கான பகிரங்க பொது ஏலம் 04.01.2017 அன்று காலை 11.30 மணிக்கு இப்பண்ணை கால்நடை பெருக்கு பண்ணை அலுவலகத்தில் ஏலம் நடத்தும் குழுவினரால் ஏலம் நடத்தப்படும்.
ஏலத்தில் கலந்து கொள்ளும் நபர்கள் தனித்தனியாக ஏலம் முன் வைப்புத் தொகையாக ரூ.5000 (ரூபாய் ஐந்தாயிரம் மட்டும்) பொது ஏலம் நடைபெறும் தினத்தன்று காலை 10.100 மணி முதல் 11.00 மணிக்குள் துணை இயக்குநர் அலுவலகத்தில் செலுத்தி தனது பெயர், முழு முகவரி ஆகியவற்றை பதிவு செய்து கொண்டு அதற்கான டோக்கன் பெற்று கொண்டு, பொது ஏலத்தில் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். காவல் துறை உதவியுடன் பொது ஏலம் நடத்தப்படும்.
முன்பணம் செலுத்தி டோக்கன் பெற்றுக் கொண்டவர்கள் தவிர வேறு நபர்கள் இந்த பொது ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஏலத்தில் கலந்து கொண்ட ஏலதாரர்களுள் அதிக ஏலத்தொகைக்கு ஏலம் கோரும் நபருக்கு ஏலம் உறுதி செய்யப்படும்.
பொது ஏலம் முடிந்தவுடன் ஏலம் நடத்தும் குழுவினரால் தேர்வு செய்யப்பட்டு தீர்வு செய்யப்படும். ஏலதாரர் கேட்ட அதிகபட்ச ஏலத்தொகை முழுவதையும் வரிகள் உள்பட அன்றே விவசாயப் பிரிவில் ரொக்கமாக செலுத்திவிட வேண்டும். பணத்தை செலுத்த கால அவகாசம் வாய்மொழியாகவோ அல்லது எழுத்து மூலாகவோ வரும் கோரிக்கைகளோ அல்லது விண்ணப்பங்களோ ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
மேலும் ஏலம் உறுதி செய்யப்பட்ட பின்பு 135 பட்டுப்போன மரங்களை பற்றி ஏதாவது காரணம் தெரிவித்து தனது பெயரில் உறுதி செய்யப்பட்ட ஏலத்தை ரத்து செய்துவிடும்படி கோரும் எந்தவிதமான கோரிக்கையும் ஏற்க இயலாது. மேலும் அவர் ஏல முன் வைப்புத் தொகை இழக்க நேரிடும்.
ஏலம் உறுதி செய்யப்பட்ட நபர் தவிர ஏலத்தில் கலந்து கொண்டவர்களின் டேவணித் தொகை ஏலம் முடிந்தவுடன் 04.01.2017 அன்றே திருப்பித் தரப்படும்.
ஏலம் எடுத்த நபர், ஏலம் எடுத்த 135 பட்டுப்போன மரங்களை மட்டும் ஏலம் உறுதி செய்யப்பட்ட நாளிலிருந்து 1 மாத காலத்திற்குள் எடுத்து செல்ல அனுமதிக்கப்படும். மேற்காணும் காலத்திற்கு பிறகு பண்ணையிலிருந்து எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படாது.
பண்ணையில் தீ மூட்டுதல், அடுப்பு எரித்தல் கூடாது. ஏலம் தீர்வு செய்யப்பட்ட பிறகு இயற்கை இன்னல்கள் அல்லது வேறு பிற காரணங்களினால் 135 பட்டுப்போன மரங்களுக்கு சேதாரம் ஏற்பட்டால் அதற்கு இப்பண்ணை பொறுப்பேற்காது.
பொது ஏலம் நடப்பதற்கு முன் விவசாயப் பிரிவில் உள்ள 135 பட்டுப்போன மரங்களை மட்டும் வேளாண்மைப் பிரிவு பண்ணை மேலாளர் அனுமதி பெற்ற அரசு வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணிக்குள் பார்வையிட்டுக் கொள்ளலாம்.
ஏலம் நடத்தும் குழுவினரின் முடிவே இறுதியானது. பொது ஏலத்தை நடத்தவும் மறு தேதிக்கு தள்ளி வைக்கவும், அல்லது நிர்வாகக் காரணங்களினால் ரத்து செய்யவும் பொது ஏலம் நடத்தும் குழுவினருக்கு முழு அதிகாரம் உண்டு. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.