அதிரை நியூஸ்: துபாய், டிச-18
துபாய் மாநகரில் வருடந்தோறும் நடைபெறும் ஷாப்பிங் பெஸ்டிவல் எனப்படும் சர்வதேச ஷாப்பிங் திருவிழா எதிர்வரும் 2016 டிசம்பர் 26 ஆம் தேதி துவங்கி 2017 ஜனவரி 28 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் துபையின் பிரசித்திபெற்ற பெரும்பாலான வணிக நிறுவனங்களும் கலந்து கொள்ளும்.
பன்னாட்டு மக்களும் வந்து குவியும் இந்த 34 நாட்கள் ஷாப்பிங் பெஸ்டிவல் காலத்தில் மின் சாதனங்கள், துணி மற்றும் ஆடை வகைகள், கடிகாரங்கள், நறுமணப் பொருட்கள், பர்னிச்சர் வகைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் என பலவகையான பொருட்களும் சுமார் 75 சதவிகிதம் வரை தள்ளுபடி விலையில் விற்கப்படுவதுடன் தங்க நகை வாங்குபவர்களுக்கு 34 நாட்களும் தினம் ஒரு கிலோ தங்கம் மற்றும் உயர்ரக கார்களும் பரிசுப் பொருட்களாக கிடைக்கும்.
இந்த ஷாப்பிங் பெஸ்டிவல் காலத்தில், கடைவீதிகளும் சாலைகளும் அலங்கரிக்கப்படுவதுடன் சிறார்களுக்கான விளையாட்டு மையங்களும் நகரின் பல பகுதிகளிலும் அமைக்கப்பட்டிருக்கும். மேலும் குளோபல் வில்லேஜ் எனப்படும் கொண்டாட்ட மையமும் பொதுமக்களால் மொய்க்கப்பட்டிருக்கும். அதிலும் இந்திய பெவிலியன் என அழைக்கப்படும் பகுதி நமது நாட்டு காலச்சார நினைவுபடுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகளை தினந்தோறும் நடத்தும்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.