.

Pages

Sunday, December 18, 2016

சவூதி – ஓமனை இணைக்கும் புதிய போக்குவரத்து சாலை !

அதிரை நியூஸ்: சவூதி அரேபியா, டிச-18
சவுதி அரேபியாவையும் ஓமன் நாட்டையும் இணைக்கும் புதிய தரைவழிச் சாலையின் கட்டுமானப் பணிகள் பெருமளவில் நிறைவு பெற்று 2017 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் போக்குவரத்திற்காக திறக்கப்படவுள்ளது. பொதி மணல் சூழ்ந்த பாலைவன வனாந்தர வெளியில் அமைக்கப்பட்டுள்ள இந்த சாலை ஒர் 'பொறியியல் அற்புதம்' (Engineering Marvel) என வர்ணிக்கப்படுகிறது.

இதுவரை சவுதிக்கும் ஓமனிற்கும் நேரடி சாலை மார்க்கம் இல்லாத நிலையிலும் ஆண்டிற்கு சுமார் 1 லட்சம் ஓமானியர்கள் சுமார் 2000 கி.மீ. சுற்றிக்கொண்டு அமீரக (UAE) சாலை மார்க்கம் வழியாக ஹஜ், உம்ரா போன்ற புனித கடமைகளை நிறைவேற்ற செல்கின்றனர். அதேபோல் சவுதி அரேபியர்களும் ஓமனின் கோடைவாசஸ்தலமான 'ஸலாலா'விற்கும் அமீரகம் வழியாகவே பயணித்து வருகின்றனர்.

இருபுறமுமாக 680 கி.மீ தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள இப்புதிய பாலைவன வனாந்தர சாலையால் சுமார் 800 கி.மீ தூர பயணம் மிச்சமாகும். ஓமன் பகுதியில் 160 கி.மீ சாலைகள் சுமார் 200 மில்லியன் ஓமன் ரியால் செலவிலும், சவுதி பகுதியில் 566 கி.மீ சாலைகள் 1 பில்லியன் சவுதி ரியால் செலவிலும் போடப்பட்டுள்ளன.

பாலைவன மணற் பள்ளத்தாக்குகளில் (Sand Dunes) பாலங்கள் கட்டுவதற்காக சுமார் 130 கியூபிக் மில்லியன் மணல்கள் கொண்டு செல்லபட்டன என்றும் இந்த மணலை கொண்டு 26 பிரமிடுகளை எழுப்ப இயலும் என்றும் இந்த சாலை கட்டுமானத்தில் ஈடுபட்ட Famco நிறுவனம் கூறியுள்ளது என்றாலும் இந்த சாலையில் போதிய பெட்ரோல் பங்குகள், உணவகங்கள், ஓய்விடங்கள், வாகனப் பழுது நீக்கும் வசதிகள் மற்றும் சாலையோர மின்விளக்குகள் ஆகியவை போதியளவில் அமைக்கப்படும் வரை இந்த மக்கள் நடமாட்டமில்லா வனாந்தர சாலை மிகவும் ஆபத்தானவையே. இந்தக்குறைகளை அகற்றும் முயற்சியாக ஓமன் தனது பகுதியில் அத்தியாவசிய கட்டமைப்புக்களை ஏற்படுத்த டெண்டர் விடும் பணிகளை துவங்கியுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.