.

Pages

Sunday, December 18, 2016

அதிரை FM 90.4 தொடக்க விழா: நேரடி ரிப்போர்ட் ! ( படங்கள் )

அதிராம்பட்டினம், டிச-18
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் சமூக பண்பலை வானொலி அதிரை எஃப்.எம் 90.4  நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் திரு. ஆ.அண்ணாதுரை இ.ஆ.ப அவர்கள் தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

'நமது சமூகம், 'நமது நலன்' என்பதை குறிக்கோளாகக்கொண்டு கல்வி, வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி, சுகாதாரம், மருத்துவம், விவசாயம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கடல்வளம், போக்குவரத்து, அரசு அறிவிப்புகள் உட்பட சமூக முன்னேற்றத்திற்கு பயன்தரும் பல்வேறு பொதுநிகழ்ச்சிகள், தினமும் 6 மணி நேரம் ( காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 7 மணி வரை ), தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற 40 க்கும் மேற்பட்ட கிராமப்பகுதிகள், பட்டுக்கோட்டை, மல்லிபட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை வரையிலான 10 ஏர் மைல் தூரத்தில் வசிக்கக்கூடிய சுமார் 2.50 லட்சம் பொதுமக்கள் பயன்பெரும் வகையில் சமூக பண்பலை வானொலி அதிரை எஃப்.எம் 90.4 துவக்க விழா நிகழ்ச்சி அதிரை இமாம் ஷாஃபி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் இன்று(18-12-2016 ) ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சமூக பண்பலை வானொலி அதிரை எஃப்.எம் 90.4 நிர்வாகத் தலைவர் ஹாஜி எம்.எஸ் தாஜுதீன் தலைமை வகித்தார். அதிரை  இமாம் ஷாஃபி மெட்ரிக்குலேஷன் நிர்வாகத் தலைவர் ஜே.ஏ தாஜுதீன் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் திரு. ஆ.அண்ணாதுரை இ.ஆ.ப அவர்கள் கலந்துகொண்டு முதல்நாள் பண்பலை வானொலி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசுகையில்; அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப்பகுதி பொதுமக்கள் கல்வி, விவசாயம், வேலைவாய்ப்பு, சுகாதாரம் ஆகியவற்றில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட பண்பலை வானொலி அதிரை எஃப்.எம் 90.4 வெற்றி பெற எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இதில் ஒலிப்பரப்பாகும் நிகழ்ச்சிகள் அனைத்தும் இப்பகுதியினரின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படும் என நம்புகிறேன்' என்றார்.

விழாவில் மாவட்ட ஆட்சியர் திரு. ஆ.அண்ணாதுரை இ.ஆ.ப அவர்கள் விலையில்லா வானொலிகள் 5 பயனாளிகளுக்கும், பள்ளி மாணவர்களுக்கு சலுகை கட்டண வானொலிகளையும் வழங்கினார்.

கிராமப் பகுதி மக்கள், தேனீர் விடுதிகள், சாலையோர வியாபாரிகள், வாடகை வாகன ஓட்டிகள், சலூன் கடைகள், அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், வர்த்தகர்கள், விவசாயிகள், மீனவர்கள் உட்பட சுமார் ஆயிரம் பயனாளிகளுக்கு விலையில்லா வானொலிகள் விநியோகிக்கப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கு 50 சதவீத சலுகை கட்டணத்தில் வானொலிகள் வழங்கப்படுகின்றன.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அதிரை காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் எம்.ஏ முஹம்மது அப்துல் காதர் வரவேற்றார். விழா இணைப்புரை சமூக பண்பலை வானொலி அதிரை எஃப்.எம் 90.4  நிகழ்ச்சி தயாரிப்புக்குழு தலைவர் பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர் வழங்கினார். விழா முடிவில் சமூக பண்பலை வானொலி அதிரை எஃப்.எம் 90.4 முதன்மை ஒருங்கிணைப்பாளர் எம்.கே செந்தில்குமார் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் ஆர். கோவிந்தராசு, வட்டாட்சியர் ரவிச்சந்திரன், மாவட்ட மெட்ரிக். பள்ளி ஆய்வாளர் மணிமேகலை, வருவாய் ஆய்வாளர் ராஜகுமாரி, கிராம நிர்வாக அலுவலர்கள் மகரஜோதி, ஆனந்தஜோதி, பள்ளி நிர்வாகப் பொருளர் இப்ராஹீம், பள்ளி இயக்குனர் ரேவதி, முதல்வர் மீனாகுமாரி, ரவிசங்கர், இன்ஜினியர் நஜீம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகப்பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

விழா துளிகள்:
1. விழாவிற்கு வருகை தந்த மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பள்ளி மாணவர்கள், ஆசிரியைகள் மற்றும் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

2. சமூக பண்பலை வானொலி அதிரை எஃப்.எம் 90.4 நிலைய அரங்கை மாவட்ட ஆட்சியர் ரிப்பன் கட் செய்து திறந்து வைத்து ரிக்கார்டிங் அரங்கை பார்வையிட்டார்.

3. அரங்கில் மாவட்ட ஆட்சியரிடம் சமூக பண்பலை வானொலி அதிரை எஃப்.எம் 90.4 நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து பவர் பாயிண்ட் ஒளித்திரை செயல் விளக்கத்தை இன்ஜினியர் நஜீம் வழங்கினார்.

4. மாவட்ட ஆட்சியரிடம் சமூக பண்பலை வானொலி அதிரை எஃப்.எம் 90.4 முதன்மை ஒருங்கிணைப்பாளர் எம்.கே செந்தில்குமார் பண்பலை வானொலியில் ஒலிப்பரப்பாகும் நிகழ்ச்சிகள் குறித்து எடுத்துரைத்தார்.

5. மாவட்ட ஆட்சியரிடம் சமூக பண்பலை வானொலி அதிரை எஃப்.எம் 90.4 சார்பில் நிகழ்ச்சி தயாரிப்புக்குழு தலைவர் பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர் பிரத்தியோக நேர்காணல் நடத்தினார். சுமார் 7 நிமிடங்கள் நீடித்த நேர்காணல் சமூகத்திற்கும், மாணவர்களுக்கும் மிகவும் பயன் தரக்கூடிய தகவல் இடம்பெற்றுள்ளது ( தளத்தில் தனிப்பதிவாக பதிவிடப்படும் )

6. பள்ளி மாணவ மாணவிகளின் சார்பில் கலந்துகொண்ட பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

7. விழா முடிவில் அதிரை எஃப்.எம் 90.4 நிர்வாகம் சார்பில் தொலைகாட்சி, பத்திரிக்கை, இணையதள ஊடகத்தினருக்கு பிரத்தியோக 'பிரஸ் மீட்' நடத்தப்பட்டது.
 



3 comments:

  1. இந்த fm அதிரை மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்குமா?

    ReplyDelete
  2. பார்க்கலாம். கேட்கலாம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.