.

Pages

Sunday, December 18, 2016

BSNL-ல் புதிய திட்டங்கள் அறிமுகம்!

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் மொபைல் வாடிக்கையாளர்களுக்குப் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தஞ்சாவூர் பொது மேலாளர் ச.வி. வினோத் தெரிவித்திருப்பது:
பி.எஸ்.என்.எல். அரசுப் பொது நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் புதிய திட்டங்களை ஞாயிற்றுக்கிழமை (டிச.18) முதல் வருகிற 2017 ஆம் ஆண்டு மார்ச் 17-ம் தேதி வரை 90 நாள்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.

இதில், கோம்போ - 339 என்ற திட்டத்தின் மூலம் ரூ. 339 செலுத்தி 28 நாள்களுக்கு அகில இந்திய அளவில் அனைத்து மொபைல் எண்களுக்கும் அளவில்லா அழைப்புகள் பேசலாம். மேலும், இத்துடன் ஒரு ஜி.பி. டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது.

கோம்போ - 139 என்ற திட்டத்தின் மூலம் ரூ. 139 செலுத்தி 28 நாள்களுக்கு அகில இந்திய அளவில் பி.எஸ்.என்.எல். எண்களுக்குள் மட்டும் அளவில்லா அழைப்புகள் பேசலாம். மேலும், இத்துடன் 300 எம்.பி. டேட்டா இலவசமாக வழங்கப்படும்.

இந்தச் சிறப்புக் கட்டணச் சேவையைத் தாங்களாகவே சி - டாப்அப் மூலமாகவும், வாடிக்கையாளர் சேவை மையம், பி.எஸ்.என்.எல். வெப் போர்டல் மூலமாகவும் பெறலாம்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.