.

Pages

Saturday, December 24, 2016

வியப்பூட்டும் மருத்துவம் - கை மேல்மூட்டு பொருத்தும் சிகிச்சை வெற்றி !

மருத்துவ உலகம் நாள்தோறும் பல புதிய சாதனைகளை வரலாறு முழுதும் பதிவு செய்தே வருகிறது. அதன் தொடர்ச்சியாக போலந்து நாட்டு மருத்துவர்கள், கையே இல்லாத ஒருவருக்கு இன்னொருவரின் கையை (மேல்மூட்டு) பொருத்தி சாதனை படைத்துள்ளனர்.

32 வயது வரை கை இல்லாமல் பிறவிக் குறைபாடுடன் வாழ்ந்து வந்த ஒருவருக்கு இறந்த மனிதரின் கையை பொருத்தி சாதனை செய்துள்ளனர். தற்போது விரல்கள் மட்டுமே அசையும் நிலையில் படிப்படியாக மற்ற பாகங்களும் இயங்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன் இத்தகைய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் இந்தோனேஷியாவிலும், கனடாவிலும் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு செய்யப்பட்டிருந்தாலும் 32 வயது வரை வாழ்ந்துவிட்ட ஒரு மனிதருக்கு செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்றும், இந்த சிகிச்சையின் வெற்றி பிறவிக் குறைபாடுடன் வாழ்ந்து வரும் பலருக்கும் நம்பிக்கையின் வாசலை திறந்து விட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.