.

Pages

Tuesday, December 27, 2016

துபாயில் இருந்து மும்பை சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானம் விபத்து !

அதிரை நியூஸ்: துபாய், டிச-27
துபாயிலிருந்து கோவா வழியாக மும்பை செல்லவிருந்த ஜெட் ஏர்வேஸ் விமானம் ஓடுபாதையிலிருந்து சறுக்கியதால் சுமார் 15 பயணிகளுக்கு லேசான காயம் எற்பட்டது.

154 பயணிகள் மற்றும் 7 விமான சிப்பந்திகளுடன் அதிகாலை சுமார் 5 மணியளவில் விமானம் மும்பைக்கு புறப்பட்ட போது ஓடுபாதையிலிருந்து எதிர்பாராதவிதமாக சறுக்கி விலகியது. எனினும், பெரிய அசம்பாவிதங்கள் ஏதுமின்றி பயணிகளும் விமானமும் இறையருளால் பத்திரமாகவுள்ளனர்.

இந்திய கடற்படையால் நிர்வகிக்கபடும் கோவாவின் தபோலிம் விமான நிலையம், ஜெட் ஏர்வேஸ் விமான விபத்தை தொடர்ந்து மூடப்பட்டிருந்தது பகல் 12.30க்குப் பின் சகஜநிலைக்குத் திரும்பியது.

Sources: Khaleej Times / Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.