அதிரை நியூஸ்: டிச-26
கடந்த வருடங்களை போல் அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதியில் நடப்பாண்டில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை நான்கு பகுதிகளாக தொகுத்து 'அதிரை நியூஸ்' வாசகர்களுக்கு வழங்க இருக்கிறோம்.
இந்த ஆண்டில் அதிரையில் நடந்த நிகழ்வுகள் ஏராளமாக இருந்தாலும், பதிவின் நீளம் கருதி குறிப்பிட்ட சில முக்கிய நிகழ்வுகளை மாத்திரம் பதிவதற்கு எடுத்துக் கொண்டுள்ளோம். இதில் ஜனவரி முதல் மார்ச் வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை பகுதி 1 எனவும், ஏப்ரல் முதல் ஜூன் வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை பகுதி 2 எனவும், ஜூலை முதல் செப்டம்பர் வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை பகுதி 3 எனவும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை பகுதி 4 என வகை படுத்தப்பட்டுள்ளது.
ஜனவரி முதல் மார்ச் வரை அதிரை நியூஸில் பதியப்பட்ட முக்கிய நிகழ்வுகள்:
Jan 26, 2016:
கடந்த 2009 ஆம் ஆண்டு காலஞ்சென்ற முன்னாள் அதிரை பேரூராட்சி தலைவர் M.M.S. அப்துல் வஹாப் அவர்களுக்கு 'கோட்டை அமீர்' விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் 67 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் அதிரை அஜ்ஜாவியத்துல் ஷாதுலியா ட்ரஸ்ட் நிர்வாக செயலாளர் M.B. அபூபக்கர் அவர்களுக்கு தமிழக அரசின் உயரிய விருதாக கருதப்படுகிற 'கோட்டை அமீர்' விருதை மறைந்த தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் வழங்கி கெளரவித்தார். இந்நிகழ்வு அதிரை மற்றும் சுற்றுப்புற பகுதி மக்களிடேயே பெரும் வரவேற்பை பெற்றது.
Jan 27,2016:
வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கிலிருந்து முன்னாள் அதிரை சேர்மன் விடுவிப்பு:
அதிரை பேரூராட்சி தலைவராக எஸ்.ஹெச் அஸ்லம் பொறுப்பில் இருந்த போது, இவர் மீது அதிரை பேரூராட்சி துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்த பன்னீர் என்பவர் அளித்த புகாரின் பேரில் கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் அன்று வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு போடப்பட்டு தஞ்சை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக நடந்து வந்த இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதுதொடர்பாக நடத்தி முடிக்கப்பட்ட இறுதிகட்ட விசாரணையை அடுத்து கடந்த ( 27-01-2016 ) அன்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போடப்பட்ட வழக்கில் இவர் நிரபராதி எனக் கூறி விடுவிக்கப்பட்டார். இந்நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Feb 7, 2016:
அதிரையில் உலக தரத்தில் நவீன வசதியுடன் கூடிய புதிய ரெஸ்டாரெண்ட் திறப்பு:
அதிரை பட்டுக்கோட்டை சாலையில் கடந்த பிப்-07 ந்தேதி 'ரிச் வே' என்ற பெயரில் உலக தரத்துடன் கூடிய புதிய ரெஸ்டாரெண்ட் உதயமாகியது. தொலைக்காட்சி புகழ் செஃப் தாமோதரன் இந்த ரிச் வே ரெஸ்டாரெண்டை திறந்து வைத்தார். இங்கு உலகத்தரத்துடன் கூடிய அனைத்து வகையான சைவ, அசைவ உணவுகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
குளிர் சாதன வசதியுடன் 200 பேர் இருக்கைகள் கொண்ட அரங்கம், திறந்த வெளி டைனிங் ஹால் மற்றும் குளிர் சாதன டைனிங் ஹால் என அமைந்துள்ளது. பட்டுக்கோட்டை சுற்றுவட்டாரத்தில் நவீன வசதிகளுடன் கூடிய ரெஸ்டரெண்ட் இதுதான் என அப்போது பேசப்பட்டது.
Feb 9, 2016:
அதிரையில் அபூர்வ பொட்டிக்கிழங்கு விற்பனை:
அதிரையின் பிரதான மார்க்கெட்டாக கருதப்படுகிற கடைத்தெரு பெரிய மீன் மார்க்கெட் பகுதியில் அதிரை சுற்றுவட்டார கிராமப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான சில்லறை பெண் வியாபாரிகள் மார்க்கெட்டின் முகப்பு பகுதியில் வரிசையாக அமர்ந்து வியாபாரம் செய்வார்கள். இங்கு அந்தந்த காலக்கட்டங்களில் கிடைக்கும் பனங்கிழங்கு, இலந்தப்பழம், நிலக்கடலை, சோளக்கதிர், மரவள்ளி கிழங்கு, சக்கரைவள்ளி கிழங்கு, பப்பாளி, வாழைப்பழம், கீரை, மாங்காய், மாம்பலம், நாவப்பழம், சீதாப்பழம், பலாப்பழம், கொய்யப்பபழம் உள்ளிட்டவை விற்கப்படும். மார்க்கெட்டில் மீன், இறைச்சி மற்றும் காய் கறிகள் வாங்க வரும் அன்றாட வாடிக்கையாளர்கள் இந்த பொருட்களை வீட்டிற்கு விரும்பி வாங்கிச்செல்வார்கள். இதனால் இந்த பகுதி பெரும் பரபரப்பாக காணப்படும்.
இந்நிலையில் வருஷத்தில் சில நாட்கள் மாத்திரம் அபூர்வமாக கிடைக்கும் பொட்டிக்கிழங்கு விற்பனைக்கு வந்தது. மருத்துவ குணம் வாய்ந்த பொட்டிக்கிழங்கை அதிகமானோர் வாங்கிச்சென்றனர். ஒரு சுண்டு ( ஒரு குவளை அளவு ) பொட்டிக்கிழங்கு ரூ 10 க்கு விற்பனை ஆனது. பெரும் வரவேற்பை பெற்றது.
Feb 12, 2016:
கடந்த வருடங்களை போல் அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதியில் நடப்பாண்டில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை நான்கு பகுதிகளாக தொகுத்து 'அதிரை நியூஸ்' வாசகர்களுக்கு வழங்க இருக்கிறோம்.
இந்த ஆண்டில் அதிரையில் நடந்த நிகழ்வுகள் ஏராளமாக இருந்தாலும், பதிவின் நீளம் கருதி குறிப்பிட்ட சில முக்கிய நிகழ்வுகளை மாத்திரம் பதிவதற்கு எடுத்துக் கொண்டுள்ளோம். இதில் ஜனவரி முதல் மார்ச் வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை பகுதி 1 எனவும், ஏப்ரல் முதல் ஜூன் வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை பகுதி 2 எனவும், ஜூலை முதல் செப்டம்பர் வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை பகுதி 3 எனவும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை பகுதி 4 என வகை படுத்தப்பட்டுள்ளது.
ஜனவரி முதல் மார்ச் வரை அதிரை நியூஸில் பதியப்பட்ட முக்கிய நிகழ்வுகள்:
Jan 26, 2016:
மதநல்லிணக்கத்திற்காக கோட்டை அமீர் விருது:
தமிழக அரசின் சார்பில் ஆண்டு தோறும் மதநல்லிணக்கத்துக்காக 'கோட்டை அமீர்' விருது வழங்கப்பட்டு வருகிறது.கடந்த 2009 ஆம் ஆண்டு காலஞ்சென்ற முன்னாள் அதிரை பேரூராட்சி தலைவர் M.M.S. அப்துல் வஹாப் அவர்களுக்கு 'கோட்டை அமீர்' விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் 67 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் அதிரை அஜ்ஜாவியத்துல் ஷாதுலியா ட்ரஸ்ட் நிர்வாக செயலாளர் M.B. அபூபக்கர் அவர்களுக்கு தமிழக அரசின் உயரிய விருதாக கருதப்படுகிற 'கோட்டை அமீர்' விருதை மறைந்த தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் வழங்கி கெளரவித்தார். இந்நிகழ்வு அதிரை மற்றும் சுற்றுப்புற பகுதி மக்களிடேயே பெரும் வரவேற்பை பெற்றது.
Jan 27,2016:
வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கிலிருந்து முன்னாள் அதிரை சேர்மன் விடுவிப்பு:
அதிரை பேரூராட்சி தலைவராக எஸ்.ஹெச் அஸ்லம் பொறுப்பில் இருந்த போது, இவர் மீது அதிரை பேரூராட்சி துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்த பன்னீர் என்பவர் அளித்த புகாரின் பேரில் கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் அன்று வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு போடப்பட்டு தஞ்சை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக நடந்து வந்த இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதுதொடர்பாக நடத்தி முடிக்கப்பட்ட இறுதிகட்ட விசாரணையை அடுத்து கடந்த ( 27-01-2016 ) அன்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போடப்பட்ட வழக்கில் இவர் நிரபராதி எனக் கூறி விடுவிக்கப்பட்டார். இந்நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Feb 7, 2016:
அதிரையில் உலக தரத்தில் நவீன வசதியுடன் கூடிய புதிய ரெஸ்டாரெண்ட் திறப்பு:
அதிரை பட்டுக்கோட்டை சாலையில் கடந்த பிப்-07 ந்தேதி 'ரிச் வே' என்ற பெயரில் உலக தரத்துடன் கூடிய புதிய ரெஸ்டாரெண்ட் உதயமாகியது. தொலைக்காட்சி புகழ் செஃப் தாமோதரன் இந்த ரிச் வே ரெஸ்டாரெண்டை திறந்து வைத்தார். இங்கு உலகத்தரத்துடன் கூடிய அனைத்து வகையான சைவ, அசைவ உணவுகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
குளிர் சாதன வசதியுடன் 200 பேர் இருக்கைகள் கொண்ட அரங்கம், திறந்த வெளி டைனிங் ஹால் மற்றும் குளிர் சாதன டைனிங் ஹால் என அமைந்துள்ளது. பட்டுக்கோட்டை சுற்றுவட்டாரத்தில் நவீன வசதிகளுடன் கூடிய ரெஸ்டரெண்ட் இதுதான் என அப்போது பேசப்பட்டது.
Feb 9, 2016:
அதிரையில் அபூர்வ பொட்டிக்கிழங்கு விற்பனை:
அதிரையின் பிரதான மார்க்கெட்டாக கருதப்படுகிற கடைத்தெரு பெரிய மீன் மார்க்கெட் பகுதியில் அதிரை சுற்றுவட்டார கிராமப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான சில்லறை பெண் வியாபாரிகள் மார்க்கெட்டின் முகப்பு பகுதியில் வரிசையாக அமர்ந்து வியாபாரம் செய்வார்கள். இங்கு அந்தந்த காலக்கட்டங்களில் கிடைக்கும் பனங்கிழங்கு, இலந்தப்பழம், நிலக்கடலை, சோளக்கதிர், மரவள்ளி கிழங்கு, சக்கரைவள்ளி கிழங்கு, பப்பாளி, வாழைப்பழம், கீரை, மாங்காய், மாம்பலம், நாவப்பழம், சீதாப்பழம், பலாப்பழம், கொய்யப்பபழம் உள்ளிட்டவை விற்கப்படும். மார்க்கெட்டில் மீன், இறைச்சி மற்றும் காய் கறிகள் வாங்க வரும் அன்றாட வாடிக்கையாளர்கள் இந்த பொருட்களை வீட்டிற்கு விரும்பி வாங்கிச்செல்வார்கள். இதனால் இந்த பகுதி பெரும் பரபரப்பாக காணப்படும்.
இந்நிலையில் வருஷத்தில் சில நாட்கள் மாத்திரம் அபூர்வமாக கிடைக்கும் பொட்டிக்கிழங்கு விற்பனைக்கு வந்தது. மருத்துவ குணம் வாய்ந்த பொட்டிக்கிழங்கை அதிகமானோர் வாங்கிச்சென்றனர். ஒரு சுண்டு ( ஒரு குவளை அளவு ) பொட்டிக்கிழங்கு ரூ 10 க்கு விற்பனை ஆனது. பெரும் வரவேற்பை பெற்றது.
Feb 12, 2016:
அதிரை பேரூராட்சியில் உள்ளிருப்பு போராட்டம்:
அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 17 மற்றும் 19 வது வார்டுகளின் கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக கூறி அதிரை பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கடந்த (12-02-2016) அன்று பேரூராட்சி அலுவலக உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் அதிரை பேரூராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள் ரபீக்கா முஹம்மது சலீம், ( 17 வது வார்டு ) செளதா அஹமது ஹாஜா ( 19 வது வார்டு ), உம்மல் மர்ஜான் அன்சர்கான் ( 11 வது வார்டு ) ஜபுரன் ஜெமீலா ( 10 வது வார்டு ) ஆகியோர் மன்றத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு கூடியது.
Mar 3, 2016:
அதிரை பேருந்து நிலைய வணிக கடைகள் பொது ஏலம்:
அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில், பேரூராட்சி சார்பில் கட்டப்பட்ட 24 வர்த்தக கடைகளுக்கான பொது ஏலம் இன்று காலை அதிரை காவல் நிலையம் எதிரே அமைந்துள்ள செல்லியம்மன் மண்டபத்தில் அமைதியாக நடந்தது.
அதிரை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் 20 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்போடு அதிரை பேரூராட்சி செயல் அலுவலர் முனியசாமி ஏலத்தை நடத்தினார். இதில் மொத்தம் 109 பேர் ரூ 1 லட்சம் டிடி தொகையை முன்வைப்பு தொகையாக செலுத்தி இருந்தனர். இவர்கள் அனைவருக்கும் டோக்கன் வழங்கி ஏலத்தில் கலந்துகொள்ள மண்டபத்தினுல் அனுமதிக்கப்பட்டனர்.
ஈசிஆர் சாலை பகுதியை ஒட்டிய 14 கடைகளை பிளாக் பி எனவும், பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை செல்லும் சாலையை ஒட்டிய கடைகளை பிளாக் ஏ எனவும் வகைப்படுத்தப்பட்டது. குறைந்தபட்ச மாத வாடகை தொகையாக ரூ 500 லிருந்து ஆராம்பமாகியது அதிகபட்சமாக ரூ 26,900 க்கும், குறைந்த பட்சமாக ரூ 8,100 க்கும் கடைகள் ஏலம் போனது.
மொத்தம் 24 கடைகளுக்கு ஏலம் விடப்பட்டது. இதில் ஏலம் எடுத்தவர்கள் டிடி தொகையை செலுத்தி கையொப்பமிட்டு உறுதி செய்தனர். மீதமுள்ளவர்களுக்கு அவர்கள் செலுத்திய டி.டி தொகை திரும்ப ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்வு பெரும் வரவேற்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
Mar 5, 2016:
உடல்நிலை பாதிப்படைந்த அதிரை வாலிபருக்கு வீடு கட்டி கொடுத்த அதிரையர்:
அதிரை எம்.எஸ்.எம் நகரை சேர்ந்தவர் எம். முஹம்மது புஹாரி. இவரது மகன் ஜெஹபர் சாதிக் ( வயது 30 ) இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குடும்ப வருமானத்திற்காக கடந்த 8 ஆண்டுகளாக தக்வா பள்ளி அருகே தட்டு வண்டி ஓட்டி வந்தார். கிடைத்த சொற்ப வருமானத்தில் குடும்பம் நடத்தி வந்தார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு திடீரென இவரது கால்கள் இரண்டும் செயல் இழந்து நடக்க முடியாமல் மிகவும் அவதிபட்டார். இதையடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை மேற்கொண்டார். இதுதொடர்பாக வாலிபரின் பெற்றோர் சார்பில் நிதி உதவி கோரி இருந்தனர்.
இதையடுத்து அதிரை நியூஸ் சார்பில் இதன் உண்மை நிலை ஆராயப்பட்டு, பின்னர் செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. இவற்றை பார்வையிட்ட உலகங்கிலும் உள்ள அதிரை, வெளியூர் மற்றும் வெளிநாடுவாழ் அன்பர்கள் நேரடியாகவும் வங்கி கணக்கின் வழியாகவும் நிதிஉதவி அளித்தனர்.
இதில் லண்டன் வாழ் சமூக ஆர்வலரும், தொடர்ந்து வாழ்வாதார மற்றும் மருத்துவ உதவிகளை தானாக முன்வந்து உதவி வருகின்ற அதிரையின் எஸ்.ஏ இம்தியாஸ் அஹமது ரூ 11 ஆயிரம் அனுப்பி உதவினார்.
இதுதொடர்பாக அதிரை நியூஸில் கடந்த [ 30-11-2015 ] அன்று வெளியிடப்பட்ட செய்தியில் இடம்பெற்ற குடிசை வீட்டின் புகைப்படங்களை கண்டு மனம் உருகிய எஸ்.ஏ இம்தியாஸ் அஹமது வாலிபரின் குடும்பத்திற்கு ஆஸ்ப்ரோ சீட்டில் வீடு கட்டி கொடுக்க முன்வந்தார். ரூ 55 ஆயிரம் அனுப்பிவைத்தார். இதையடுத்து இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து முடிந்தது. புனரமைக்கப்பட்ட வீட்டில் வாலிபரின் குடும்பத்தினர் கடந்த மார்ச் 5 ந் தேதி குடியமர்த்தப்பட்டனர்.
புனரமைக்கப்பட்ட வீட்டின் மொத்த செலவுத்தொகை ரூ 70 ஆயிரம், மீதமுள்ள ரூ 15 ஆயிரத்தை பணியை எடுத்து செய்த வெல்டர் அப்பு, உடல் நிலை பாதிப்படைந்த வாலிபர் குடும்பத்தின் பரிதாப நிதி நிலையக் கண்டு தனது சொந்த பணத்தை கொடுத்து உதவினார். இந்நிகழ்வு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Mar 7, 2016
அரசு பொதுத்தேர்விற்காக அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மா தொழுகையின் நேரம் மாற்றம்:
12 ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு தமிழகமெங்கும் கடந்த [ 04-03-2016 ] அன்று முதல் தொடங்கியது. அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் ஜும்மா தொழுகையை பின்பற்றுவதற்கு ஏதுவாக ஜும்மா பயான் சரியாக பகல் 12.45 மணிக்கு துவங்குகி தொடர்ந்து 1.30 மணிக்கு ஜூம்மா தொழுகை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இவை மிகுந்த வரவேற்பை பெற்றது.
Mar 7, 2016:
அதிரை பைத்துல்மாலில் பெண்களுக்கான சிறப்பு தையல் பயிற்சி பள்ளி துவக்கம்:
அதிரை பைத்துல்மால் கடந்த 1993 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு பல்வேறு பொதுநல சேவைகள் தொய்வின்றி செய்து வருகிறது. குறிப்பாக வட்டியில்லா நகைக் கடன் வழங்கும் திட்டம், கைவிடப்பட்ட முதியோர்கள், விதவைகள் ஆகியோருக்கான பென்ஷன் வழங்கும் திட்டம், ஏழைக்குமர்களுக்கான திருமண உதவி வழங்கும் திட்டம், வறிய மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவி வழங்கும் திட்டம் மற்றும் மருத்துவ உதவி சுன்னத் உதவி ஆகியன சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அதிரை பைத்துல்மாலின் மற்றுமொரு பொதுநல சேவையாக பெண்களின் சுய தொழில் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் நோக்கில் தையல் பயிற்சி அளிக்கும் திட்டத்தை 06-03-2016 முதல் தொடங்கியது. இந்நிகழ்வு பெரும் வரவேற்பை பெற்றது.
Mar 13, 2016:
அதிரையில் அஸர் முதல் இஷா வரை நடந்த ஒளிமயமான குடும்ப நிகழ்ச்சி:
தஞ்சை தெற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா - பட்டுக்கோட்டை டிவிசன் சார்பில் 'தாருல் நூர்' ( ஒளிமயமான வீடு ) சகோதரத்துவ குடும்பங்களின் சங்கம நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை அஸர் முதல் இஷா தொழுகை வரை அதிரை சாரா திருமண மகாலில் நடந்தது.
நிகழ்ச்சியில் இஸ்லாமிய மார்க்கம் தொடர்பான 50 கேள்வி - பதில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் 150 க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இதில் வெற்றி பெற்ற 10 பேர்களுக்கு விழா மேடையில் பரிசுகள் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.