.

Pages

Thursday, December 22, 2016

அமீரகத்தில் 7 DAYS பத்திரிக்கை சேவை இன்றுடன் நிறுத்தம் !

அதிரை நியூஸ்: துபாய், டிச-22
அமீரகத்தில் வருடந்தோறும் கடும் கோடைவெயில் வாட்டி வதைக்கும் ஜூன் 15 முதல் செப்டம்பர் 16 வரை வெளிப்புறங்களில் வெயிலில் வேலைசெய்யும் தொழிலாளர்களுக்கு கட்டாய ஓய்வு அமீரக அரசால் சட்டமியற்றப்பட்டு வழங்கப்படுகிறது. இந்த தொழிலாளர் நல சட்டத்தை அமீரக அரசு இயற்றுவதற்கும், அதை கடுமையாக கண்காணித்து பின்பற்றுவதற்கும் காரணமாக அமைந்தது 7 DAYS எனும் வாராந்திர ஆங்கில பத்திரிக்கை.

2004 ஆம் ஆண்டு தனது ஊழியர் ஒருவரை பரிசோதனை முயற்சியாக உச்சிவெயில் கொளுத்தும் நேரத்தில் சுமார் 1 மணிநேரம் பாலைவெயிலில் வேலை செய்ய வைத்து பின்பு அவரை மருத்துவமனையில் சேர்த்து அவரது உடல்நிலையை சோதித்து அதன் அறிக்கைகளை அமீரக அரசின் கவனத்தை பெறும்வகையில் பிரசுரித்து கொண்டு சென்றதை தொடர்ந்தே கடும் கோடைகாலங்களில் மனிதாபிமான அடிப்படையில் கட்டாய ஓய்வு வழங்கும் சட்டத்தை அமீரகம் உறுதியாக பின்பற்றத் துவங்கி அதை இன்றும் பாதுகாத்து வருகிறது.

இப்படி பல நல்ல விஷயங்களின் காரணகர்த்தாவாக விளங்கிய, கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் வெளிவரும் வாராந்திர ஆங்கில பத்திரிக்கையான 7 DAYS இன்று தனது 3,140 வது இறுதிப் பதிப்புடன் தனது பயணத்தை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது.

பல்வேறு விஷயங்களையும் நினைவுகூர்ந்து அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள 7 DAYS பத்திரிக்கைக்கு நாமும் நன்றியோடு பிரியாவிடைதருவோம்.

Source: 7 Days
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.