.

Pages

Wednesday, December 21, 2016

கண்கள் குளமாகுதம்மா சதாம் ஹுசைனை நினைக்கையிலே! ~ டாக்டர் ஏ.பீ.முகமது அலி,பிஎச்.டி(ஐ.பீ.எஸ்)

ங்களுக்கெல்லாம் தெரியும் 2003 ஆம் ஆண்டு இராக் நாடு அதிகம் ஆள் கொல்லி ஆயுதம் கொண்டு அமெரிக்கா மற்றும் கூட்டு நாடுகளுக்கு எதிராக ஆபத்து விளைவிக்கும் என்று தெரிகிறது என்ற வடி கட்டிய பொய்யினை உலக நாடுகளில் பரப்பியதோடு மட்டுமல்லாமல், அமெரிக்க-இங்கிலாந்து கூட்டுப் படையினர் அந்த நாட்டின் மீது படையெடுத்தனர் என்று.
அத்தோடு நில்லாமல் அந்த நாட்டினைப் பிடித்து, அதன் எண்ணெய் வளங்களை, மற்றும் அரசு, தனிப் பட்டவர் சொத்துக்களை கொள்ளையடித்து, அல் மாலுக்கி என்ற பொம்மை ஷியா அரசை அரியணையில் ஏற்றினர். சில நாட்களில் அதன் ஜனாதிபதி சதாம் ஹுசைனை வஞ்சகர் மூலம் கண்டு பிடித்து கண் துடைப்பு நீதி விசாரணை மூலம் தூக்கு மேடைக்கு ஏற்றினர். ஆனால் அவர்கள் தேடி வந்த ஆட்கொல்லி ஆயுதம் சிக்கியதா என்றால் இல்லை என்பதும் உங்களுக்குத் தெரியும், உலக நாட்டு மக்களுக்கும் தெரியும்.

ஆனால் அந்த இராக் நாட்டில் அமைதி திரும்பியதா என்றால் இல்லையே, அது ஏன்? அதனைத் தான் உலக நாடுகளும் கேட்கின்றன. அப்படி என்ன தாரகை மந்திரம் அதிபர் சதாம் ஹுசைனிடம். பல்வேறு இனத்தினவரையும் தன் ஆளுமையால் ஒருங்கிணைத்து வல்லரசுகளுக்கே ஒரு சவால் விடும் அரபு நாடு இராக் ஒன்றே என்று சொல்லும் அளவிற்கு தன் நாட்டினை கட்டுக் கோப்பாக வைத்திருந்தார் என்றே சொல்லலாம்.

இராக் நாட்டினை பிடித்த பின்பு, சதாம் ஹுசைன் கைது செய்து அக்கினி விசாரணையில் அதனை விசாரித்த சி.ஐ.ஏ.என்ற அமெரிக்க உளவுப் படையின் அதிகாரி நிக்சன் சமீபத்தில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதனை டெய்லி மிரர் என்ற அமெரிக்க பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

சதாம் ஹுசைனிடம், உளவுத் துறை அதிகாரி நிக்சன், 'உங்கள் மீது ஆட்கொல்லி ஆயுதம் வைத்திருப்பதாக குற்றம் உள்ளதே என்ற கேள்விக்கு, நாங்கள் ஒரு  போதும் அவ்வாறு செய்ய எண்ணவில்லை, எங்களிடம் அதுபோன்ற ஆயுதமும் இல்லை. எல்லாம் வல்ல இறைவன் அப்பாவி பொதுமக்களை அவ்வாறு அழிக்க கட்டளை இடவுமில்லை. உங்களிடம் கூட அதுபோன்ற ஆயுதம் இருந்தாலும் எங்கள் மீது அதனை உபயோகிக்கவில்லையே அது ஏன்' என்று கேட்டுள்ளார்.

சதாம் தொடர்ந்து கூறும்போது, இராக் நாட்டினைப் பற்றி அல்லது மொழியினைப் பற்றியோ அல்லது அராபிய நாட்டு மக்களைப் பற்றியோ உங்களுக்குத் அதிகம் தெரியாது. உங்களுடைய முயற்சி வெற்றி பெறாது, தோல்வியினை நீங்கள் அடையப் போவது நிச்சயம்' என்று கூறியதாகவும், அதன் படியே அமெரிக்க கூட்டுப் படை இராக் நாட்டிலிருந்து வெளியேறினாலும், இன்னும் கூட 5000 அமெரிக்க ராணுவத்தினர் அங்கு இருந்து இராக் ராணுவத்திற்கு உதவியாக உள்ளனர். அது மட்டுமல்லாது அவர்களுக்கு உதவியாக ஆளில்லா விமானம் மூலம் சுன்ன முஸ்லிம்களை அழித்துக் கொன்று அதனை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டு அவர்களுக்கு மிகப் பெரிய தோல்வியும் தந்துள்ளது என்றும் கூறுகிறார். இதனையே தான் சதாம் ஹுசைன் ஒரு தீர்க்கதரிசியாக எச்சரித்துள்ளார் என்று கூறுகிறார் நிக்சன்.

இதனைப் போன்று தான் கடாபியும் இங்கிலாந்து அப்போதைய பிரதமர் டோனி பிளேயரிடம் 2012 ஆம் ஆண்டு, 'நீங்கள் என்னை பதவியிலிருந்து நீக்கினால் லிபியாவில் குழப்பம் ஏற்படும் என்று எச்சரித்துள்ளார். இன்றும் அந்த நாட்டில் நிலையான ஆட்சி இல்லையே அது ஏன் என்று இப்போதாவது மேலை நாடுகள் சிந்திக்க வேண்டாமா தோழர்களே!

டாக்டர் ஏ.பீ. முகமது அலி, பிஎச்,டி, ஐ.பீ.எஸ்(ஓ)
ஓய்வுபெற்ற மூத்த காவல்துறை அதிகாரி 
எழுத்தாளர்  
சமூக ஆர்வலர்

3 comments:

  1. சதாம் உசைன் கெட்டவர் என்று நிரூபிக்க ஒரு ஆதாரத்தையும் அமெரிக்கா கண்டுபிடிக்கவில்லை. பொய் புகாரின் பேரில் அவர் கொலை செய்யப்பட்டார். சதாம் ஹுசைனால் அதிகம் லாபமடைந்த நாடு இந்தியாதான். இந்தியாவிற்கு மலிவு விலையில் கட்சா என்னை வழங்கினார். காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா பக்கம் நின்றார். காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தமான மாநிலம் என்று வெளிப்படையாக தெரிவித்தார். ஆனால் இவரை அமெரிக்காவிடம் இருந்து காப்பாற்ற டெல்லியில் இருந்த தொடை நடுங்கி எந்த நடவைக்கையையும் எடுக்கவில்லை.வாங்கி தின்ன மட்டும்தான் தெரியும் நன்றி காட்ட தெரியாதவர்கள் ஆண்ட காலம் அது. சதாம் இருந்தவரை இராக், சிரியா மற்றும் பல அரபு நாடுகளில் தீவிரவாதம் கிடையாது. தீவிரவாதிகள் மீது சதாம் ஹுசைய்ன் கடும் நடவடிக்கையை எடுத்தவர். முஸ்லிம் நாடுகளிலேயே பெண்களுக்கு அதிக பாதுகாப்பும், கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை என அனைத்தையும் அளித்த ஒரே தலைவர் சதாம் மட்டுமே. அணுகுண்டு வைத்திருக்கிறார் என்று இராக் மீது போர்தொடுத்த அமெரிக்கா அங்கு ஒரு சோள பொறியை கூட கண்டு பிடிக்க முடியவில்லை. அதன் விளைவு இன்று ISIS என்று தீவிரவாதம் ஆலமரமாக தழைத்து நிற்கிறது.

    சதாம் உசைன், லிபியாவின் கடாபி போன்ற சர்வாதிகாரிகள் இப்போது பதவியில் இருந்திருந்தால் உலகம் 100 சதவீதம் சிறப்பானதாக இருக்கும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆட்டிப்படைக்க அம்மா இருந்ததுப் போல, முட்டாள் தீவிரவாதிகளை அடக்கி நிற்க சதாம், கடாபி, அன்வர் சதாத் போன்ற தலைவர்கள் தேவை தான் - இல்லையே !

    ReplyDelete
  2. என் கூட வேலைசெய்த ஈராக் நாட்டு கிறிஸ்தவ மதத்தை சார்ந்த என் நண்பன் சொன்னான். என் அப்பாவை பறிகொடுட்டோம் ஈராக் மற்றும் ஈரான் சண்டையில் ஆனால் நான் ஒரு உண்மையை உனக்கு சொல்லணும் எங்கள் நாட்டை சாதம் ஹுசைன் ஆலும்போது ஒரு தனி நபரிடம் ஒரு துப்பாக்கிகூட இல்லை ஆனால் இப்போ அமெரிக்கா ஆக்கிரமிப்புக்கு பிறகு அனைவரிடமும் ஆயுதம் உள்ளது.

    ReplyDelete
  3. இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவர் மீதும் உண்டாகட்டும் ,

    அதிரை வாசிகளே உங்களிடம் சில கோரிக்கைகளை எடுத்துரைக்க ஆசை படுகிறேன்,நமது ஊரில் நமது சமுதாயத்தில் குறைந்த பட்ச்சம் ஒரு பாரிஸ்டர் (barrister)ஆவது உருவாக வேண்டும், அதிகம் வைக்கில் படிப்பு படிக்க நமது ஊர் மக்களை ஊக்கப்படுத்துங்கள் அல்லாஹ்வின் துணையோடு சட்ட கல்லூரி ஒன்று நிறுவ முயற்சி செய்யுங்கள் ,காதர் முஹைதீன் கல்லூரி நிர்வாகத்தினரிடம் எடுத்துரைத்து முயற்சி செய்யுங்கள் ,முயற்சி செய்தால் முடியாதது எதுமே இல்லை.

    அதிரை நியூஸ் வெப்சைட் மூலம் சில விஷமிகள் செய்தி சேகரிக்கிறாள்கள் என்பதை நான் தெரியப்படுத்த விருபுகிறேன் முக்கியமான ரகசியம் காக்க வேண்டிய செய்திகளை வெளிப்படையா பகிர வேண்டாம்.

    இவன்
    அதிரை வாசி

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.