.

Pages

Friday, December 23, 2016

சவூதி ரியாத்தில் திமுக கிளை உதயம் !

அதிரை நியூஸ்: ரியாத், டிச-23
சவூதி ரியாத் வாழ் திமுகவினர் கலந்துகொண்ட ஆலோனைக்கூட்டம் ரியாத்தில் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு எச். முகமது லாபீர் தலைமை வகித்து அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் ரியாத் மண்டலத்தில் திமுக புதிய கிளை துவக்குவது என முடிவு செய்யப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

இதில் தலைவராக எச். முகமது லாபீர், செயலாளராக எஸ்.எம் ஆசிக், பொருளாலரக எஸ் தாஜி முகமது, துணைத் தலைவராக தளபதி ஆர்.பிரகாஷ், துணைச்செயலாளராக எம் அன்வர்தீன், துணை பொருளாளராக எஸ். சாகுல்ஹமீது ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதையடுத்து வரும் சனவரி 6 ந் தேதி திமுக தலைமை கழக நிர்வாகி ஒருவரை அழைத்து புதிய அலுவலகம் திறப்பு விழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் ரியாத் வாழ் திமுகவினர் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி மற்றும் படங்கள்:
ரியாத்திலிருந்து தாஜி முகமது
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.