.

Pages

Sunday, December 18, 2016

துபாயில் 4 மெட்ரோ நிலையங்களில் ஸ்மார்ட் மால்கள் திறப்பு !

அதிரை நியூஸ்: துபாய், டிச-18
துபாயில் செயல்படும் ஏடிசிபி (ADCB), டாமக் (Damac), துபை இன்டெர்நெட் சிட்டி மற்றும் எமிரேட்ஸ் டவர்ஸ் ஆகிய மெட்ரோ நிலையங்களில் முதற்கட்டமாக ஸ்மார்ட் மால்கள் எனப்படும் தொடுதிரை வணிக நிறுவனங்களை துபை போக்குவரத்து துறையும் எடிசலாட் தொலைத்தொடர்பு நிறுவனமும் இணைந்து அமைத்துள்ளன.

உயர் வரையறை (High Definition) 3D டிஜிட்டல் டெக்னாலஜியில் 9 சதுர மீட்டர் அளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த தொடுதிரையயை ஒரே நேரத்தில் இருவர் பயன்படுத்தி தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். நாம் வாங்கும் பொருட்களுக்கான கட்டணத்தையும் டெபிட், கிரடிட் கார்டுகளை பயன்படுத்தி செலுத்திவிட்டால் நாம் குறிப்பிடும் முகவரிக்கு பொருட்கள் டெலிவரி செய்யப்பட்டுவிடும்.

மேலும் இந்தத்திட்டத்தின் அடுத்த கட்டமாக பஸ், மெட்ரோ போக்குவரத்திற்கு பயன்படும் நோல்கார்டுகள் மற்றும் மொபைல் போன் பேலன்ஸ் கட்டணங்களை கொண்டும் ஸ்மார்ட் மால்களில் பொருட்களை வாங்கத் தேவையான ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.