.

Pages

Monday, December 26, 2016

34 ஆண்டுகளுக்கு முன் விமான விபத்தில் அதிசயமாக பிழைத்தவர் மறைந்தார் !

அதிரை நியூஸ்: டிச-26
சுமார் 34 ஆண்டுகளுக்கு முன் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் நகரிலிருந்து (இன்றைய) குரேஷிய தலைநகர் ஜக்ரேப் நகருக்கு பறந்து கொண்டிருந்த (அன்றைய) யூகோஸ்லோவியா ஏர்வேஸ் விமானம் சுமார் 33,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது நடுவானில் குரேஷிய தீவிரவாதிகளால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது.

இந்த விமானத்தில் இருந்தவர்களில் 22 வயதுடைய வெஸ்னா உலோவிச் (Vesna Vulovic) என்ற விமான பணிப்பெண்ணும் ஒருவர் ஆனால் உடனிருந்தவர்கள் இறக்க சுமார் 10 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து விழுந்தவர் பலத்த காயங்களுடன் பிழைத்துக் கொண்டார்.

அன்று விமான விபத்தில் அதிசயமாக பிழைத்தவர் இன்று தனது 66 வயதில் தனது பெல்கிரேடு (செர்பிய தலைநகர்) வீட்டில் இயற்கை எய்தினார்.

வரலாற்றுத் தகவல்: 
1991 ஆம் ஆண்டு வரை இருந்த யூகோஸ்லாவியா என்ற நாடு அதே ஆண்டு ஜூலை 25 ஆம் நாள் ஸ்லோவினியா (Slovenia), குரேஷியா (Croatia), போஸ்னியா ஹெர்ஸகோவினா Bosnia & Herzegovina), மோன்டிநெக்ரோ (Montenegro), மாஸிடோனியா ( Macedonia) மற்றும் செர்பியா (Serbia) என 6  நாடுகளாக சிதறியது.

2003 ஆம் செர்பியாவும் மான்டிநெக்ரோவும் மீண்டும் இணைந்து ஒரே நாடுகளாகின என்றாலும் மீண்டும் 2006 ஆம் ஆண்டு மீண்டும் பிரிந்தன.இதில் செர்பியாவின் கோசோவோ (Kosovo) மற்றும் வொஜ்வோடினா (Vojvodina) ஆகிய பகுதிகள் தன்னாட்சி (Autonomous states) அதிகாரம் பெற்றவை.

2008 ஆம் ஆண்டு கோசோவோ செர்பியாவிலிருந்து பிரிந்து தனிநாடாக தன்னை அறிவித்து கொள்ள, அமெரிக்கா உட்பட 100க்கு மேற்பட்ட நாடுகள் இதை அங்கீகரித்துள்ளன என்றாலும் ரஷ்யா மற்றும் செர்பியாவின் எதிர்ப்பால் இன்று வரை ஐ.ந.சபை அங்கீகரிக்கவில்லை.

தலைவிரித்தாடிய இனவெறியின் காரணமாக யூகோஸ்லாவியா என்ற நாடு சிதறுண்டதன் விளைவாக, பல்லாயிரக்காணக்கான குரேஷிய, போஸ்னியா ஹெர்ஸகோவினா ஆகிய நாட்டு மக்களை பல்லாயிரக்கணக்கில் கொன்றொழித்தான் செர்பிய அதிபராக இருந்த ஸ்லபோடன் மிலோசவிச் (Slobodan Milosevic) என்ற கொடுங்கோலன். பின்பு கைது செய்யப்பட்டு 'தி ஹேக்' (The Hague) நகரில் சர்வதேச நீதிமன்றத்தில் (International Crimes Tribunal) போர் குற்றங்களுக்காக விசாரித்து வரப்பட்ட நிலையில் 2006 ஆம் ஆண்டு சிறையில் மரணமடைந்தான்.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.