.

Pages

Monday, December 26, 2016

விர்ஜீனியா தம்பதிக்கு ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறப்பு !

அதிரை நியூஸ்: டிச-26
அமெரிக்காவின் விர்ஜீனியாவை சேர்ந்த தம்பதியினருக்கு ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் (Quintuplets) பிறந்துள்ளன. ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் கர்ப்பத்தில் வளர்ந்து வருவதை 6 வது மாதத்தில் ஊர்ஜிதம் செய்யப்பட்டதை தொடர்ந்து மிகவும் கவலைப்பட துவங்கிய தாய் பிரசவத்திற்குப்பின் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார்.

3 மருத்துவர்கள், 2 மயக்க மருந்து நிபுணர் உட்பட மொத்தம் 24 பேர் குழுவாக செய்த நன்கு திட்டமிடப்பட்ட பிரசவ அறுவை சிகிச்சையின் விளைவாக 5 குழந்தைகளும் சுமார் 17 நிமிடங்களில் பிறந்தனர். அவர்களில் 4 பேர் ரோஜா மொட்டுக்கள், செல்வன் ஒருவன்.

ஒவ்வொரு குழந்தையும் சுமார் 3 பவுண்ட் எடையுள்ளனர். தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் (Intensive care unit) வைத்து கண்காணிக்கப்படும் குழந்தைகள் ஐவரும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Source: nbcwashington.com
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.