அதிராம்பட்டினம், டிச-23
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடயே பாண்டிச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடர்புகொண்டு உரையாடும் நிகழ்ச்சி அண்மையில் பள்ளி அரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளர் ஹாஜி எம்.எஸ் தாஜுதீன் தலைமை வகித்து வரவேற்றார். நிகழ்ச்சி குறித்து அறிமுக உரையை பள்ளி இயக்குனர் ரேவதி வழங்கினார்.
நிகழ்ச்சியில் பாண்டிச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடர்பு கொண்டு மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசுகையில்; நாட்டின் வேலைவாய்ப்பு திண்டாட்டத்தை போக்குவதற்கு ஒவ்வொருவரும் புதிய தொழில்களை
தொடங்கி வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் எனவும், சமூகத்திற்கும், நமது நாட்டின் வளர்ச்சிக்கும் நாம் ஆற்ற வேண்டிய கடமைகள் குறித்து எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஒருங்கிணைப்பாளர்கள் ரவிசங்கர், இன்ஜினியர் நஜீம் ஆகியோர் செய்தனர். சுமார் 30 நிமிடங்கள் நடந்த இந்நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாக பொருளாளர் இப்ராஹீம், பெற்றோர் ஆசிரியர் கழகப் பொறுப்பாளர்கள் சிபஹத்துல்லா, முகமது சலீம், சமூக பண்பலை வானொலி அதிரை எஃப்.எம் 90.4 நிகழ்ச்சி தயாரிப்பு பொறுப்பாளர்கள் செந்தில்குமார், பேராசிரியர் செய்யது அகமது கபீர் உட்பட பள்ளி ஆசிரியைகள், மாணவர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி முடிவில் பள்ளி முதல்வர் மீனா குமாரி நன்றி கூறினார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.