.

Pages

Sunday, December 25, 2016

சவூதியில் வெளிநாட்டு ஊழியர்கள் மீது தீர்வை அதிகரிப்பு: முழு விவரம் !

அதிரை நியூஸ்: சவூதி அரேபியா, டிச-25
சவுதியில் கடந்த வியாழனன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டின்படி 2017 ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை படிப்படியாக வெளிநாட்டு ஊழியர்கள் மீதான தீர்வை வரி (Expat Levy) உயர்த்தப்படவுள்ளது.

எந்தெந்த நிறுவனங்களில் எல்லாம் சவுதி நாட்டவர்கள் அல்லது வளைகுடா அரபு நாடுகளைச் சேர்ந்த பணியாளர்களை விட பிற வெளிநாட்டினர் அதிகளவில் வேலை பார்க்கின்றார்களோ அந்த நிறுவனங்கள் எல்லாம் தற்போது மாதந்தோறும் நபர் ஒன்று 200 ரியால் தீர்வை (Levy) செலுத்தி வருகின்றனர். இந்தத் தீர்வை 2017 ஆம் ஆண்டு ஒவ்வொரு ஆண்டு முதல் படிப்படியாக உயர்த்தப்பட்டு நபர் ஒருவருக்கு 800 ரியால் தீர்வை எனும் அளவை 2020 ஆண்டு எட்டவுள்ளது என்றாலும் வீட்டுப் பணியாளர்கள், வீட்டு டிரைவர்கள் போன்றவர்கள் இந்தத் தீர்வையிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளனர்.

சவுதி நாட்டவர்கள் மற்றும் வளைகுடா அரபு நாட்டவர்களை விட குறைந்த வெளிநாட்டினர் வேலை செய்யும் கம்பெனிகளிடமிருந்தும் குறைந்தபட்ச தீர்வை வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் குடும்பத்துடன் வாழும் வெளிநாட்டவர்கள் 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் உடன் வாழும் உறவுகளுக்காகவும் தீர்வை செலுத்த வேண்டும்.

வருடம் வாரியாக வசூலிக்கப்படவுள்ள தீர்வைகள்:

2017 ஆம் ஆண்டு:
வெளிநாட்டினரின் குடும்ப அங்கத்தவர்களுக்காக நபர் ஒன்றுக்கு மாதாமாதம் 100 ரியால் தீர்வை செலுத்த வேண்டும். இது 2017 ஜூலை மாதம் முதல் அமுலுக்கு வருகிறது.

2018 ஆம் ஆண்டு:
வெளிநாட்டினரின் குடும்ப அங்கத்தவர்களுக்காக நபர் ஒன்றுக்கு மாதாமாதம்; 200 ரியால் தீர்வை செலுத்த வேண்டும். இது 2018 ஜூலை மாதம் முதல் அமுலுக்கு வருகிறது.

சவுதி நாட்டவர்களை விட குறைவாக அல்லது அவர்களின் எண்ணிக்கைக்கு சமமாக வேலை செய்யும் வெளிநாட்டவர்கள் ஒவ்வொருவர் மீதும் மாதாமாதம் 300 ரியால் தீர்வை செலுத்த வேண்டும், இது 2018 ஜனவரி முதல் அமுலுக்கு வருகிறது.

சவுதி நாட்டவர்களை விட அதிகமாக வெளிநாட்டினர் அதிகமாக பணியாற்றும் நிறுவனங்களை சேர்ந்த வெளிநாட்டினர் ஒவ்வொருவர் மீதும் மாதாமாதம்; 400 ரியால் தீர்வை செலுத்த வேண்டும், இதுவும் 2018 ஜனவரி முதல் அமுலுக்கு வருகின்றது.

2019 ஆம் ஆண்டு:
வெளிநாட்டினரின் குடும்ப அங்கத்தவர்களுக்காக நபர் ஒன்றுக்கு மாதாமாதம் 300 ரியால் தீர்வை செலுத்த வேண்டும். இது 2019 ஜூலை மாதம் முதல் அமுலுக்கு வருகிறது.

சவுதி நாட்டவர்களை விட குறைவாக அல்லது அவர்களின் எண்ணிக்கைக்கு சமமாக வேலை செய்யும் வெளிநாட்டவர்கள் ஒவ்வொருவர் மீதும் மாதாமாதம் 500 ரியால் தீர்வை செலுத்த வேண்டும், இது 2019 ஜனவரி முதல் அமுலுக்கு வருகிறது.

சவுதி நாட்டவர்களை விட அதிகமாக வெளிநாட்டினர் அதிகமாக பணியாற்றும் நிறுவனங்களை சேர்ந்த வெளிநாட்டினர் ஒவ்வொருவர் மீதும் மாதாமாதம் 600 ரியால் தீர்வை செலுத்த வேண்டும், இதுவும் 2019 ஜனவரி முதல் அமுலுக்கு வருகின்றது.

2020 ஆம் ஆண்டு:
வெளிநாட்டினரின் குடும்ப அங்கத்தவர்களுக்காக நபர் ஒன்றுக்கு மாதமாதம் 400 ரியால் தீர்வை செலுத்த வேண்டும். இது 2020 ஜூலை மாதம் முதல் அமுலுக்கு வருகிறது.

சவுதி நாட்டவர்களை விட குறைவாக அல்லது அவர்களின் எண்ணிக்கைக்கு சமமாக வேலை செய்யும் வெளிநாட்டவர்கள் ஒவ்வொருவர் மீதும் மாதாமாதம் 700 ரியால் தீர்வை செலுத்த வேண்டும், இது 2020 ஜனவரி முதல் அமுலுக்கு வருகிறது.

சவுதி நாட்டவர்களை விட அதிகமாக வெளிநாட்டினர் அதிகமாக பணியாற்றும் நிறுவனங்களை சேர்ந்த வெளிநாட்டினர் ஒவ்வொருவர் மீதும் மாதாமாதம் 800 ரியால் தீர்வை செலுத்த வேண்டும், இதுவும் 2020 ஜனவரி முதல் அமுலுக்கு வருகின்றது.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

2 comments:

  1. சொந்த ஊரில் சம்பாதிப்பதே சிறந்தது .

    ReplyDelete
  2. yess...Saudi became another USA...KSA-USA

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.