.

Pages

Tuesday, May 2, 2017

ரியாத்தில் நடந்த அதிரடி சோதனையில் போலி பொருட்கள் பறிமுதல் !

அதிரை நியூஸ்: மே-02
ரியாத் அமீரின் உத்தரவின் பேரில் நடைபெற்ற 9 மணிநேர அதிரடி சோதனையில் சுமார் 16,500 வாகன போலி உதிரி பாகங்கள், போலி வாசனை திரவியங்கள், பாட்டில்கள் மற்றும் போலி மொபைல் சிப்புகள் உட்பட பல்லாயிரக்கணக்கான பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

சுமார் 40 வாகனங்களை நிறுத்தி சோதனை செய்ததில் ஹஜ், உம்ரா விசாவில் வந்து ரியாத் நகரில் சட்ட விரோதமாக வேலை செய்யும் 76 பேர் பிடிபட்டனர். அதேபோல் மன்போஹா பகுதியில் அமைந்துள்ள பேக்கரி ஒன்றில் பணியாற்றி வந்த விசா இல்லாத வெளிநாட்டவர்களும் பிடிபட்டனர்.

அதிரடி சோதனையின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட போக்குவரத்து சோதனையின் மூலம் 350 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், கேடான மீன்கள், காய்கறி பழ வகைகள், நோயுற்ற பறவை வகைகள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன. கேடான உணவுகளை விற்ற 11 கடைகளும் மூடப்பட்டன. சட்ட விதிகளை காற்றில் பறக்கவிட்ட 6 மொபைல் போன் கடைகளின் மீதும் வழக்குகள் பதியப்பட்டன.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.