துபாய், சவூதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை பெருநாள் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
பெருநாள் தினத்தின் முக்கிய நிகழ்வான ஈதுப் பெருநாள் திடல் தொழுகை துபாய், தெய்ரா, அல் பரஹா ஈத்கா மைதானத்தில் இன்று காலை 6 மணி அளவில் பன்னாட்டு மக்களும் பல்லாயிரக்கணக்கில் திரளாக கலந்து கொண்ட நிலையில் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
இதேபோல் பர்துபையில் அமைந்துள்ள மைதானத்தில் நடைபெற்றது, இதில் துபை ஆட்சியாளர்கள் பங்கேற்று தொழுகை நடத்தி பெருநாள் குத்பா உரையாற்றுவது குறிப்பிடத்தக்கது.
அல் மைதானத்தில் நடைபெற்ற ஈதுப் பெருநாள் தொழுகைக்குப் பின் அதிரையர்கள் வழமைபோல் ஒன்றுகூடி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டாடினர்.
துபையில் கடும் கோடையும் புழுக்கமும் நிலவி வரும் நிலையில் தொழுகை நேரத்தில் மெல்லிய தென்றல் வீசியதால் வியர்வை குளியலிலிருந்து தப்பினர்.
தொழுகை நிறைவுற்ற பின் சந்தோஷத்தின் ஒரு பகுதியாக அரசினரால் தேரா பகுதியே குலுங்கும் வகையில் சம்பிரதாய வேட்டுக்கள் வெடிக்கப்பட்டன. இந்நிகழ்வு நமது ஊரின் குத்பா பள்ளியில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் செய்யது முஹமது அண்ணாவியார் அப்பா அவர்களின் நிர்வாகத்தின் கீழ் குத்பா பள்ளி இருந்த போது நோன்பு திறப்பதற்காக நமது ஊருக்கே கேட்கும் வகையில் வேட்டுக்கள் வெடிக்கப்படும்
வரலாற்றை நினைவுபடுத்தியது.
துபையிலிருந்து அதிரை அமீன்
இன்றைய தினத்தில் ஈதுல் பித்ர் பண்டிகையை கொண்டாடும் துபாய் மற்றும் அனைத்துலக முஸ்லிம் மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். கடந்த மாதமானது நோன்பு, ஆன்மீக மலர்ச்சி, மற்றும் உதவி தேவைப்பட்டோருக்கு உதவி புரியும் காலமாக இருந்தது.
ReplyDeleteஈதுல் பித்ர் பண்டிகையின்மூலம் பரிசுத்தம், புனிதத்தன்மை மற்றும் ஆன்மீக ரீதியான தூய்மை ஆகியவை மீளப்பெற்றுக் கொள்ளப்படுவதுடன் மனிதாபிமான ரீதியில் எம்மை ஒற்றுமைப்படுத்தும் விழுமியங்களும் பாதுகாக்கப்படுகின்றன.
உலக மதங்களின் செழிப்புமிக்க மரபுரிமையை இலங்கை அடைந்திருப்பதால் நிலையான நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் நோக்கிச் செல்கின்ற எமது தேசியத்தில் இஸ்லாம் மதம் எவ்வாறு பங்களிக்கின்றது என்பதை ஈதுல் பித்ர் பண்டிகை எமக்கு நினைவூட்டுகின்றது.
இன்ஷா அல்லாஹ், இலங்கை வாழ் முஸ்லிம் மக்களின் மகிழ்ச்சிகரமான ஈதுல் பித்ர் பண்டிகைக்கும் பாதுகாப்புமிக்க சௌபாக்கியமான எதிர்காலத்திற்கும் எனது நல்வாழ்த்துக்கள்.
ஈத் முபாரக்