.

Pages

Tuesday, June 13, 2017

குவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு !

அதிராம்பட்டினம், ஜூன் 13
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பிலால் நகரை சேர்ந்தவர் பஷீர் அகமது. இப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மகன் வாசிம்கான் (வயது 28). இவர் கடந்த 2013 ஆண்டு முதல் குவைத் நாட்டில் காலித் அப்துல் ஜலீல் என்ற சீனியர் வழக்குரைஞரிடம் உதவியாளராக பணியாற்றி வந்தார். கடந்த 2016 ஆண்டு விடுமுறையில் குவைத்திலிருந்து ஊர் திரும்பிய இவருக்கும், இவரது உறவினர் பெண் பெமினா பாத்திமா என்பவருக்கும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், குவைத்திலிருந்து கடந்த ஜூன் 7 ந் தேதி தனது தந்தை பஷீர் அகமதிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினாராம். அதன் பிறகு மகனிடமிருந்து எவ்வித தொடர்புமில்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்த பஷீர் அகமது குவைத்தில் உள்ள தனது உறவினர்களை தொடர்பு கொண்டு விசாரிக்கும் படி கூறியிருக்கிறார்.

இந்நிலையில், கடந்த 8 ந் தேதி குவைத் மன்சூரியா என்ற பாலத்தின் கீழே இறந்த உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாகவும், இவை குவைத் மருத்துவமனையில் பிரத பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. அதிர்ச்சியடைந்த உறவினர்கள் குவைத் மருத்துவமனைக்கு இன்று செவ்வாய்க்கிழமை சென்று உடலை பார்வையிட்டனர். இறந்த உடல் வாசிம்கான் தான் என தெரியவந்தது. இதையடுத்து அதிராம்பட்டினம் பிலால் நகரில் உள்ள வாசிம்கானின் தந்தை பஷீர் அகமதுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு:
இதுகுறித்து இறந்த வாசிம் கான் தந்தை பஷீர் அகமது கூறியது;
குவைத்திலிருந்து எனது மகன் வாசிம்கான் கடந்த 7 ந் தேதி தொலைப்பேசியில் என்னிடம் தொடர்பு கொண்டு பேசினான். அதன் பின்னர் எவ்வித தொடர்பும் கொள்ளவில்லை. கவலையடைந்த நான் குவைத்தில் உள்ள எனது உறவினர்களிடம் தகவல் தெரிவித்து விசாரிக்கும் படி கூறினேன். இறந்து விட்டதாக இன்று செவ்வாய்க்கிழமை மாலை தகவல் கிடைத்தது. எனது மகன் நேர்மையானவன். யாரிடமும் எவ்வித சண்டை வம்புக்கு போகாதவன். அமைதியானவன். தானுண்டு தன் வேலை உண்டு என இருந்து வந்தான். இந்நிலையில் மர்மமான முறையில் இவன் இறந்தது பெரும் அதிச்சியளிக்கிறது. இதுகுறித்து குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவியோடு முறையான விசாரணை நடத்தி, எனது மகன் சாவுக்கான காரணம் குறித்தும், இறந்த எனது மகனின் உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்க முடிவு செய்துள்ளேன்' என்றார்.

சோகத்தில் பிலால் நகர் பகுதி மக்கள்:
குவைத்தில் இறந்த வாசிம்கான் பிலால் நகர் பகுதி பொதுமக்களிடம் அன்பாக பழகக்கூடியவர். இப்பகுதியில் நடந்த அனைத்து இன்ப - துன்ப நிகழ்வுகளில் தானாக முன்வந்து உதவியவர். தகவலறிந்த இப்பகுதி பொதுமக்கள் மற்றும் இவரது நண்பர்கள் பலர் பெரும் சோகத்துடன் காட்சியளிக்கின்றனர்.

ஆண் குழந்தை பிறந்தது:
இறந்த வாசிம்கான் மணமுடித்து இன்னும் சில வாரங்களில் ஓராண்டு எட்ட உள்ள நிலையில், இவரது மனைவிக்கு பட்டுக்கோட்டை தனியார் மருத்துவமனையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை அழகான ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

12 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவின்

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவின்

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  7. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  8. Inna lillahi wa inna ilaihi raajion

    ReplyDelete
  9. Innarillahi wa innarillahi rajhoon allah evarukku 7am sokkathai taruvanaga evar therithum thereyamalum seitha pavangalai mannipanaga aameen

    ReplyDelete
  10. Innarillahi wa innarillahi rajhoon allah evarukku 7am sokkathai taruvanaga evar therithum thereyamalum seitha pavangalai mannipanaga aameen

    ReplyDelete
  11. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்......

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.