அதிரை நியூஸ்: மார்ச் 10
அமீரகத்தில் பெரும் தொழிலதிபராக விளங்கும் லூலூ வர்த்தக குழுமங்களின் தலைவர் யூசுப் அலி அவர்கள் அமெரிக்க அதிபர் டிரம்பை விட பெரும் பணக்காரராக விளங்குவதாக ஆண்டுதோறும் உலகப் பணக்காரர்களை பட்டியலிட்டு வரும் போர்ப்ஸ் (Forbes Magazine) பத்திரிக்கை தெரிவித்துள்ளது. இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 388 ரேங்க் பெற்று இந்தியாவின் 19 வது பெரும் பணக்காரராகவும், மலையாளிகளில் முதன்மை பணக்காரராகவும் திகழ்கிறார்.
போர்ப்ஸ் இதழின் 2018 ஆம் ஆண்டின் பட்டியலின்படி, கேரளாவைச் சேர்ந்தவரும் அமீரகத்தில் வாழ்பவருமான யூசுப் அலியின் சொத்து மதிப்பு 5 பில்லியன் டாலர்களாகும். ஜனாதிபதி ஆவதற்கு முன் வர்த்தகராக திகழ்ந்த டிரம்பின் சொத்து மதிப்பு 3.1 பில்லியன் டாலர்கள் மட்டுமே. கடந்த ஆண்டைவிட 400 மில்லியன் டாலர்கள் அவரது சொத்திலிருந்து குறைந்துள்ளன. கடந்த ஆண்டு 544 ரேங்க் பெற்றிருந்த டிரம்ப் 766 ரேங்கிற்கு சரிந்துள்ளார்.
அமீரகத்தில் வாழும் 7 இந்தியர்கள் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவர்களின் மொத்த சொத்து மதிப்பு 22.7 பில்லியன் டாலர்களாகும் (83.3 பில்லியன் திர்ஹம்).
யூசுப் அலியை தொடர்ந்து அமீரகம்வாழ் இந்தியர்களான மிக்கி ஜக்தியானி (4.4 பில்லியன் டாலர்), பி.ஆர்.ஷெட்டி (4 பில்லியன் டாலர்), ரவி பிள்ளை (3.9 பில்லியன் டாலர்), சன்னி வர்கி (2.4 பில்லியன்), ஜாய் சலுக்கீஸ் (1.5 பில்லியன் டாலர்), ஷம்சீர் வயாலில் (1.5 பில்லியன் டாலர்) என வரிசைகட்டி வருகின்றனர்.
உலக அளவில் புதிய சாதனையாக இந்த ஆண்டு மொத்தம் 2,208 பில்லியனர்கள் உள்ளது தெரிய வந்துள்ளது. இவர்களின் மொத்த சொத்து மதிப்பு 9.1 டிரில்லியன் டாலர்களாகும். இது கடந்த ஆண்டைவிட 18 சதவிகிதம் கூடுதல் வளர்ச்சியாகும்.
அமெஸான் நிறுவனத்தின் ஜெப் பிஜோஸ் உலகின் புதிய பெரும் பணக்காரராக உருவெடுத்துள்ளார், இவரது சொத்து மதிப்பு 112 பில்லியன் டாலர்கள். ஜெப் பிஜோஸால் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்ட மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்ஸின் சொத்து மதிப்பு 90 பில்லியன் டாலர்களாகும். 3 ஆம் இடத்தில் முதலீட்டாளர் வாரன் பப்பெட் 84 பில்லியன் டாலர்களுடன் உள்ளார்.
இந்தியாவில் 121 பில்லியனர்கள் உள்ளனர் இவர்களில் 19 பேர் இந்த ஆண்டின் புதிய வருகையாகும். இதன் மூலம் அமெரிக்கா மற்றும் சீனாவை அடுத்து பெரும் பணக்காரர்கள் வாழும் நாடாக இந்திய உருவெடுத்துள்ளது.
ஆற்றல் மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறையில் ஈடுபட்டுள்ள முகேஷ் அம்பானி 40.1 பில்லியன் டாலர்களுடன் இந்தியாவின் முதன்மை பெரும் பணக்காராக உள்ளார். கடந்த ஆண்டைவிட 16.9 பில்லியன் டாலர்கள் புதிய சொத்துக்களாக இவரிடம் இணைந்துள்ளன.
Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.