.

Pages

Tuesday, June 30, 2020

மரண அறிவிப்பு ~ எம்.அப்துல் சமது (வயது 60)

அதிரை நியூஸ்: ஜூன் 30
அதிராம்பட்டினம், கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் கே.பி.எம் முகமது யாகூப் அவர்களின் மருமகனும், முத்துப்பேட்டை மர்ஹூம் முகைதீன் பிச்சை மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் சபுர் முகைதீன், மர்ஹூம் ஷாஜஹான், பாருக், ஜாஹிர் உசேன் ஆகியோரின் சகோதரரும், கே.பி.எம் சாகுல் ஹமீது, கே.பி.எம் சேக்தாவூது ஆகியோரின் மச்சானும், ஏ.நாசர் அவர்களின் மாமனாரும், ஏ.ஹாஜா சரீப், ஏ.ஜெஹப்ர் சாதிக் ஆகியோரின் தகப்பனாருமாகிய எம்.அப்துல் சமது (வயது 60) அவர்கள் கடற்கரைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (30-06-2020) பகல் 1 மணியளவில் கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம்  செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Monday, June 29, 2020

பட்டுக்கோட்டை சப் கலெக்டருக்கு PFI மாவட்ட நிர்வாகிகள் வாழ்த்து!

பட்டுக்கோட்டை, ஜூன் 29
பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் ஏ.ஆர் கிளாஸ்டன் புஷ்பராஜ், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை இணைச் செயலாளராக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர் ஒருங்கிணைந்த மாவட்டங்களின் தலைவர் ஏ.ஹாஜா அலாவுதீன், அவ்வமைப்பின் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் வழக்குரைஞர் இசட். முகமது தம்பி ஆகியோர் இன்று திங்கட்கிழமை நேரில் சந்தித்து இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்துனர்.

அப்போது, தமிழ்மாமணி அதிரை அஹ்மத் எழுதிய 'நபி வரலாறு' நூலை அன்பளிப்பாக வழங்கினர். 

அதிராம்பட்டினத்தில் குப்பைகளை அகற்றக்கோரி எஸ்டிபிஐ கட்சி மனு!

அதிராம்பட்டினம், ஜூன் 29
அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் காணப்படும் குப்பைகளை அகற்றக்கோரி, எஸ்டிபிஐ கட்சி அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் எஸ்.எம் சாகுல் ஹமீது, பொருளாளர் என்.எம் சேக்தாவூது, இணைச்செயலாளர் சி.அகமது ஆகியோர் பேரூராட்சி செயல் அலுவலர் பி.பழனிவேலுவை  திங்கட்கிழமை அவரது அலுவலகத்தில் சந்தித்து மனு அளித்தனர்.

அதிராம்பட்டினத்தில் மஜக சார்பில் பொதுமக்களுக்கு கப சுரக் குடிநீர் விநியோகம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூன் 29
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், மனிதநேய ஜனநாயகக்  கட்சி அதிராம்பட்டினம் பேரூர் சார்பில், அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையில் பொதுமக்களுக்கு கப சுரக் குடிநீர் இன்று திங்கட்கிழமை காலை வழங்கப்பட்டது.

இதில், அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் துணைச் செயலாளர் மர்ஜூக் தலைமையில், நிர்வாகிகள் சாகுல் ஹமீது (ஸ்மார்ட்), அதிரை சேக், அப்துல் சமது, அஷ்ரப், ஜபருல் ஹக், அகமது அஸ்கர், நபில் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, பயணிகள், வாகன ஓட்டுனர்கள், வர்த்தகர்கள் உள்பட பொதுமக்களுக்கு கப சூரக் குடிநீரை நேரில் சென்று வழங்கினர்.

ஒரே வாரத்தில் பொதுமக்களுக்கு 2-வது முறையாக கப சூரக் குடிநீர் வழங்குவது குறிப்பிடத்தக்கது. 
 

Sunday, June 28, 2020

தஞ்சாவூர் மாவட்டத்தில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம்: ஆட்சியர் தகவல்!

அதிரை நியூஸ்: ஜூன் 28
தஞ்சாவூர் மாவட்டத்தில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டம் மற்றும் துணை நீர் மேலாண்மை திட்டத்தின் மூலமாக மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளதாவது :-
பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசன கருவிகள், தெளிப்பு நீர் பாசன கருவிகள், மழைதூவான் போன்ற உபகரணங்கள் அங்கீகரிக்கப்பட்ட நுண்ணீர் பாசன நிறுவனங்கள் மூலம் மானிய விலையில் அமைத்துத் தரப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின்கீழ் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ரூபாய் 30.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மா, வாழை, நெல்லி போன்ற பழப்பயிர்கள், வெண்டை, கத்தரி, பாகல், பூசணி, மரவள்ளி போன்ற காய்கறி பயிர்கள், மல்லிகை, ரோஜா, சம்மங்கி போன்ற மலர் பயிர்கள் ஆகிய தோட்டக்கலைப்பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

மேலும், துணை நீர் பாசன மேலாண்மை திட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட வட்டங்கள் மற்றும் குறுவட்டங்களில் ஆழ்குழாய் அல்லது திறந்தநிலை கிணறு அமைப்பதற்கு ரூபாய் 25,000 மானியமும், மின்மோட்டார் மற்றும் டீசல் என்ஜின் வாங்குவதற்கு ரூபாய் 15,000 மானியமும், பாசன நீர் பிவிசி பைப்புகள் வாங்குவதற்கு ரூபாய் 10,000 மானியமும், நீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்திக்கொள்ள அதிகபட்சமாக ரூபாய் 40,000 மானியமும் வழங்கப்படுகிறது. துணை நீர் பாசன மேலாண்மை திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ரூபாய் 4.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டம் மற்றும் துணை நீர் மேலாண்மை திட்டம் ஆகிய திட்டங்களில் பயன்பெற விரும்பும் தோட்டக்கலைப்பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வயலின் வரைபடம், மண் மற்றும் நீர் மாதிரி அறிக்கைகள், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் தகவல்களுக்கு, 04362-271880, 9443898919 ஆகிய எண்களில் தஞ்சாவூர் தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலகத்தையும், 9965362562 என்ற எண்ணில் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தையும், தஞ்சாவூர் மற்றும் பூதலூர் வட்டாரங்களை சேர்ந்த விவசாயிகள் 9842184435 என்ற எண்ணிலும், ஒரத்தநாடு மற்றும் திருவோணம் வட்டாரங்களை சேர்ந்த விவசாயிகள் 9488945801 என்ற எண்ணிலும், பட்டுக்கோட்டை மற்றும் மதுக்கூர் வட்டாரங்களை சேர்ந்த விவசாயிகள் 9943422198 என்ற எண்ணிலும், பாபநாசம், அம்மாபேட்டை மற்றும் திருவையாறு வட்டாரங்களைச் சேர்ந்த விவசாயிகள் 9940843213 என்ற எண்ணிலும், கும்பகோணம், திருவிடைமருதூர் மற்றும் திருப்பனந்தாள் வட்டாரங்களை சேர்ந்த விவசாயிகள் 9655577082 என்ற எண்ணிலும், பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் வட்டாரங்களைச் சேர்ந்த விவசாயிகள் 9445257303 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கரோனா வார்டு: ஆட்சியர் ஆய்வு (படங்கள்)

பட்டுக்கோட்டை, ஜூன் 28
கரோனா வைரஸ் உலக மக்களை அச்சுறுத்திவரும் வேளையில் தமிழகத்தில் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது. இதனால் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் புதிதாக கொரோனா வார்டுகள் அமைக்கப்பட்டவுள்ளது.

இந்த வார்டில் புதிய படுக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா வார்டுகளை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ம.கோவிந்தராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் புதிய படுக்கை வசதிகளை பார்வையிட்டார். மேலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டால் அதற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் இருக்கிறதா என்பதையும் ஆய்வு செய்து அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் டாக்டர்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து டாக்டர்களுக்கு விரிவாக அறிவுறுத்தியோடு, அவர்களது கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.

இந்நிகழ்வின்போது மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ராமு, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ஏ.அன்பழகன் மற்றும் மருத்துவர்கள், மருத்துவ அலுவலர்கள் உடன் இருந்தனர்.
 
 
 

மரண அறிவிப்பு ~ ஹாஜி எஸ்.எம்.ஏ அப்துல் கபூர் (வயது 73)

அதிரை நியூஸ்: ஜூன் 28
அதிராம்பட்டினம், நடுத்தெருவைச் சேர்ந்த இடுப்புக்கட்டி மரைக்காயர் மர்ஹும் எஸ்.ஏ முகமது அஜ்வாத் அவர்களின் மகனும், முட்டைகோழி வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் அல்ஹாஜ் முகமது இப்ராஹீம் அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஹாஜி எஸ்.எம்.ஏ சாகுல் ஹமீது, எஸ்.எம்.ஏ முகமது ஹனிபா, எஸ்.எம்.ஏ முகமது புஹாரி, மர்ஹும் எஸ்.எம்.ஏ முகமது ஜெக்கரியா, ஹாஜி எஸ்.எம்.ஏ அகமது கபீர் ஆகியோரின் சகோதரரும், அப்துல் மாலிக், சிராஜுதீன், பர்கத் அலி, இலியாஸ் அகமது ஆகியோரின் தகப்பனாரும், தமீம் அன்சாரி அவர்களின் மாமனாருமாகிய ஹாஜி எஸ்.எம்.ஏ அப்துல் கபூர் (வயது 73) அவர்கள் இன்று காலை வாய்க்கால் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (28-06-2020) பகல் லுஹர் தொழுதவுடன் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம்  செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Saturday, June 27, 2020

இமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளியில் உயர் கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம், ஜூன் 27
உயர் கல்விக்கான வழிகாட்டுதல் (Higher Education Counseling Programme)  நிகழ்ச்சி, ஆன்லைன் மூலம் அதிராம்பட்டினம், இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் இன்று (27.06.2020) சனிக்கிழமை காலை 10 மணி முதல் 12 ம‌ணி வரை நடைபெற்றது.

இந்நிகழ்வில், புதுக்கல்லூரி முன்னாள் பேராசிரியர் நாசர் “சிறந்த கல்லூரியையும் பாடப்பிரிவையும் தே‌ர்‌வு செய்வது எப்படி? "என்ற தலைப்பிலும், ரியாஸ் அவர்கள், "Future IT Careers - எதிர்காலத்தின் தகவல் தொடர்புத் துறை வாய்ப்புகள்", என்ற தலைப்பிலும், அனஸ் அவர்கள்
"Preparing for Civil Services from School Days and Architecture as a Career -
கட்டிடக்கலைத் துறை மற்றும் பள்ளி பருவத்தில் இருந்தே IAS போன்ற துறைக்கு தயாராவது எப்படி?" என்ற தலைப்பிலும், கவுஸ் அவர்கள்
"How to prepare for NEET? - நீட் தேர்வுக்கு எவ்வாறு தயாராவது?" என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தி. மேற்படிப்புக்கான துறைகளை தேர்ந்தெடுப்பது குறித்து வழிகாட்டுதல் செய்தனர்.

இதில், பள்ளியின் 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர் கலந்துகொண்டு பயனடைந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை, பள்ளி நிர்வாகம் செய்திருந்தது.

சென்னையில் அதிரை ஹாஜி நெய்னா பிள்ளை (66) வஃபாத்!

அதிரை நியூஸ்: ஜூன் 27
அதிராம்பட்டினம் மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் எம்.கே.எம் அப்துல் ரஹீம் அவர்களின் மகனும், முகமது அலி, ஹாஜா, அப்துல் முத்தலீஃப், அப்துல் முனாப், முகமது காசீம், நூர் முகம்மது ஆகியோரின் சகோதரரும், பைசல் அகமது, அப்துல் ரஹீம் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி நெய்னா பிள்ளை (வயது 66) அவர்கள் இன்று சென்னை கோயம்பேடு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா சென்னையில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

அதிராம்பட்டினம் தன்னார்வ அமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு!

அதிராம்பட்டினம், ஜூன் 27
அதிராம்பட்டினம் தன்னார்வல அமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஒருங்கிணைப்பாளராக ஏ. அப்துல் மாலிக், தலைவராக ஏ.ஹசன், செயலாளராக டி.பைசல் ரஹ்மான், துணைச் செயலாளராக எஸ்.சமீர் அலி
பொருளாளராக ஏ. முனவ்வர் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இதுதவிர வாட்ஸ்அப் குழு ஒன்றை ஏற்படுத்தி, இவற்றை 24 மணி நேரமும் கண்காணிக்க 10 பேர் கொண்ட பொறுப்பாளர்கள நியமிக்கப்பட்டனர்.

இவ்வமைப்பினர் பயனர்களுக்கு இரத்ததானம் ஏற்பாடு செய்து கொடுத்தல், வரியவர்களுக்கு உதவுதல், நாடோடிகளுக்கு உணவளித்தல், மருத்துவ உதவி, கரோனா உள்ளிட்ட பேரிடர்கால களப்பணிகள் என பல்வேறு சமூகப் பணிகளை சாதி, மத, இன பேதமின்றி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

இரத்த தானம் மற்றும் அவசர கால உதவி தொடர்புக்கு...
சமீர் பின் அகமது:-9787574715
அசார்:-8667886349
அனஸ் அகமது:-8778096145
ஃபாதில்:-9791910938

அதிராம்பட்டினத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் பதாகை ஏந்தி போராட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூன் 27
கரோனா ஊரடங்கில் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை விரைவாக தமிழகம் அழைத்து வர வேண்டும், பெட்ரோல் ~ டீசல் விலையை குறைத்திட வேண்டும், மின் கட்டணம், டோல்கேட் கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும், கரோனா அபாயம் நீங்கும் வரை பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும், அனைத்து கல்விக் கட்டணங்களையும் அரசே ஏற்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சி சார்பில், இன்று (ஜூன் 27) சனிக்கிழமை தமிழகம் முழுவதும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கோரிக்கை போராட்டம் நடத்த அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நடந்த போராட்டத்தில், அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் அகமது அஸ்லம் தலைமை வகித்தார்.  செயலாளர் சாகுல் ஹமீது, பொருளாளர் சேக்தாவூத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பிஎப்ஐ அமைப்பின் அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் ஜாவித், ஊடக அணி மாவட்டத் தலைவர் முகமது அசாருதீன் உள்பட எஸ்டிபிஐ கட்சியினர் கலந்துகொண்டு கைகளில் பதாகை ஏந்தியவாறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை தெற்கு மாவட்டத்தில் 5  இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மரண அறிவிப்பு ~ ஹாஜிமா முகமது மரியம் (வயது 70)

அதிரை நியூஸ்: ஜூன் 27
அதிராம்பட்டினம், நடுத்தெரு மேல்புறத்தை சேர்ந்த மர்ஹூம் செ.ந முகமது அஜ்வாத் அவர்களின் மகளும், மர்ஹூம் மு.க.மு.கி அபுல் ஹசன் சாதுலி அவர்களின் மனைவியும், மர்ஹூம் ஹாஜி முகமது அலி ஆலிம், மர்ஹூம் மீரா லெப்பை மரைக்காயர் ஆகியோரின் சகோதரியும், அகமது அமீன் அவர்களின் தாயாருமாகிய ஹாஜிமா முகமது மரியம் (வயது 70) அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (27-06-2020) பகல் 1 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

அதிராம்பட்டினத்தில் மஜக சார்பில் பொதுமக்களுக்கு கப சுரக் குடிநீர் விநியோகம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூன் 27
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், மனிதநேய ஜனநாயகக்  கட்சி அதிராம்பட்டினம் பேரூர் சார்பில், அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு கப சுரக் குடிநீர் இன்று சனிக்கிழமை காலை வழங்கப்பட்டது.

இதில், அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டம் மற்றும் அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகிகள் சேக், ஸ்மார்ட் சாகுல், அப்துல் சமது, அஸ்ரப், மர்ஜூக், ஹக், நபீல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, பயணிகள், வாகன ஓட்டுனர்கள், வர்த்தகர்கள் உள்பட பொதுமக்களுக்கு கப சூரக் குடிநீரை நேரில் சென்று வழங்கினர்.
 
 
 
 
 
 
 
 
 
 

Friday, June 26, 2020

அதிரை பிரமுகருக்கு லண்டன் குரைடன் மேயர் பாராட்டு!

அதிரை நியூஸ்: ஜூன் 26
கரோனா பேரிடர் காலத்தில் லண்டன் குரைடன் பகுதியில் தீவிர களப்பணியில் ஈடுபட்ட அதிராம்பட்டினத்தை சேர்ந்த லண்டன் வாழ் தன்னார்வலர் எஸ்.ஏ இம்தியாஸ் அகமதின் பொதுநலச்சேவைக்கு, லண்டன் குரைடன் நகர் மேயர் ஹுமாயுன் கபீர் சான்றிதழ் வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.

தமுமுக ~ மமக அதிராம்பட்டினம் பேரூர் புதிய நிர்வாகிகள் தேர்வு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூன் 26
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் (தமுமுக), மனிதநேய மக்கள் கட்சியின் (மமக) அதிராம்பட்டினம் பேரூர் புதிய நிர்வாகிகள் தேர்வுக் கூட்டம் அதிராம்பட்டினதில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, அவ்வமைப்பின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் எம். நஸ்ருத்தீன் ஸாலிகு தலைமை வகித்தார். தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் அ.சாதிக் பாட்சா, எம்.தமீம் அன்சாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், தமுமுக அதிராம்பட்டினம் பேரூர் தலைவராக எச்.செய்யது புஹாரி,  துணைத்தலைவராக எம்.நெய்னா முகமது, செயலாளராக நியாஸ் முகமது, துணைச்செயலாளர்களாக எம். அகமது அஸ்லம், அஸ்ரப் அலி, பொருளாராக முகமது யூசுப் ஆகியோரும், மமக அதிராம்பட்டினம் பேரூர் செயலாளராக எஸ்.ஏ இத்ரீஸ் அகமது, துணைச்செயலாளராக பீர் முகமது ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்தில், அவ்வமைப்பினர் பலர் கலந்துகொண்டனர்.
 

சாத்தான்குளம் வியாபாரிகள் படுகொலையைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்!

தஞ்சாவூர் ஜூன்.27-
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகளான தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் படுகொலைக்கு காரணமான காவல்துறை, உடந்தையாக இருந்த மருத்துவர்கள், சிறைத் துறை அதிகாரிகள், நீதித்துறை நடுவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவர்களை பணிநீக்கம் செய்து, கொலை வழக்குப் பதிவு செய்து, உடனடியாக கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அரசு வேலை வழங்க வேண்டும். காவல்துறையினருக்கு மனித உரிமைகள் குறித்த பயிற்சி வழங்க வேண்டும். காவல்நிலைய படுகொலைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்.

படுகொலை செய்த காவல்துறைக்கு மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு துணை போகக்கூடாது. பேராவூரணி காவல்துறையினர் விவசாயிகள் சங்கத் தலைவர் கொரட்டூர் நீலகண்டன் மீது பொய் வழக்குப் போடும் முயற்சியைக் கைவிட வேண்டும்" என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், பேராவூரணி அண்ணாசிலை அருகில் நேற்று வெள்ளிக்கிழமை காலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு, ஒன்றியச் செயலாளர்கள் பேராவூரணி ஏ.வி.குமாரசாமி, சேதுபாவாசத்திரம் ஆர்.எஸ்.வேலுச்சாமி ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டக்குழு உறுப்பினர் வீ.கருப்பையா முன்னிலை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.வாசு கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில், கட்சி நகரச் செயலாளர் வே.ரெங்கசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆர்.மாணிக்கம், இந்துமதி, ராமலிங்கம், ராஜா முகமது, கிளைச் செயலாளர் தயார் சுல்தான் மற்றும் 25 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.