அதிரை நியூஸ்: ஜூன் 18
தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உரிய அனுமதியின்றி பிற மண்டலங்களிலிருந்து வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ம.கோவிந்தராவ் உத்தரவிட்டுள்ளார்.
கரோனோ தடுப்பு நடவடிக்கைக்காக மாநில அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள 144 தடை உத்தரவில் ஒரு சில தளர்வுகளுடன் பொதுமக்களின் வசதிக்காக மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, மண்டலங்களுக்குள்ள மாவட்டங்களுக்கு சென்றுவர அனுமதி இல்லாமலும், பிற மண்டலங்களுக்கு சென்றுவர உரிய அனுமதி பெறவேண்டும் எனவும் தமிழ்நாடு அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை செயல்படுத்தும் விதமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு பிற மண்டலங்களிலிருந்து வருபவர்கள் உரிய அனுமதி சீட்டு பெற்றுள்ளனரா என்பது குறித்து சோதனை சாவடிகளில் ஆய்வு செய்து அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
உரிய அனுமதிச் சீட்டு பெறாமல் பிற மண்டலங்களில் இருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர்கள் மீது காவல்துறையின் மூலம் வழக்கு பதிவு செய்ய அறிவுறுத்தப்படும் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.