.

Pages

Sunday, June 14, 2020

இமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளியின் முதல் ஹாஃபிழ் மாணவராக M.Y முத்தஸ்ஸிர் தேர்ச்சி!

அதிராம்பட்டினம், ஜூன் 14
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல் நிலைப்பள்ளி முதல் ஹாஃபிழ் மாணவராக M.Y முத்தஸ்ஸிர் தேர்ச்சி பெற்றுள்ளார்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல் நிலைப்பள்ளியில் ஹிஃப்ழ் (குர்ஆன் மனனம் செய்தல்) அகடெமி கடந்த 21-07-2018 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், பள்ளி மாணவர்கள் கல்வி பயின்று கொண்டே குர்ஆனை துரிதமாக மனனம் செய்யும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பள்ளியில் ஏழாம் வகுப்பில் கல்வி பயிலும், அதிராம்பட்டினம் ஜெ.எம் முகமது யூசுப் மகன், M.Y முத்தஸ்ஸிர் பள்ளியின் முதல் ஹாஃபிழ் மாணவராக தேர்ச்சி பெற்றுள்ளார். இவருக்கு பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், பெற்றோர், சக மாணவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

இதுகுறித்து பள்ளித் தாளாளர் எம்.எஸ் முகமது ஆஜம் கூறியது;
பள்ளியின் முதல் ஹாஃபிழ் மாணவராக M.Y முத்தஸ்ஸிர் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த அசாதாரண சூழலிலும் எங்கள் பள்ளி ஆசிரியர் ஹாஃபிழ். எஸ்.முகமது அபூபக்கர் மாணவர்களிடம் பாடங்களை கைப்பேசியில் கேட்டு, பாடத்தில் தொய்வு ஏற்படா வண்ணம் பயிற்சி அளித்து வந்தது பாராட்டுக்குரியது. அடுத்த சில மாதங்களில் மற்றொரு மாணவர் ஹாஃபிழாக தேர்வு பெற உள்ளார்.

வரும் கல்வியாண்டில் மாணவிகளுக்கும் ஹிஃப்ழ் வகுப்பு மற்றும் முபல்லிகா பாடத் திட்டங்கள் துவங்கப்பட உள்ளன. ஒரு மாணவரின் வெற்றியானது, பள்ளி நிர்வாகம் மேற்கொள்ளும் முயற்சி, ஆசிரியரின் ஈடுபாடு மற்றும் பெற்றோரின் ஒத்துழைப்பு சார்ந்து இருக்கும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். மென்மேலும் மாணவ மணிகளின் இம்மை மற்றும் மறுமையின் வெற்றிச் சேவையை சிறப்பாக நிறைவேற்ற அனைவரும் பிரார்த்தனை (துஆ) செய்யுங்கள் என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.