.

Pages

Saturday, June 20, 2020

தஞ்சையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற புதிய கட்டிடம் திறப்பு (படங்கள்)

அதிரை நியூஸ்: ஜூன் 20
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் ராஜராஜன் மணிமண்டபம் அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தின் திறப்பு நிகழ்ச்சியில் வேளாண்மை துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு முதன்மை மாவட்ட நீதிபதி வி.சிவஞானம், மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர் ராஜராஜன் மணிமண்டபம் அருகில் ரூபாய் 39.56 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம், தஞ்சாவூர் - புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் ரூபாய் 1.08 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள நீதிபதிகளுக்கான விருந்தினர் மாளிகை, தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் ரூபாய் 3.44  கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள நீதிமன்ற கட்டிடம், தஞ்சாவூரில் புதிதாக துவங்கப்பட்டுள்ள கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், கூடுதல் மகிளா நீதிமன்றம் ஆகியவற்றை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அம்ரேஸ்வர் பிரதாப் சாகி காணொலி காட்சி மூலம் இன்று (20.06.2020) திறந்து வைத்தார்.

சுமார் 13.13 ஏக்கர் பரப்பளவு கொண்ட வளாகத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தின் கட்டட அளவு 1,55,916 சதுர அடியாகும். 18 நீதிமன்ற அறைகள், கணினி அறைகள், காணொளிக்காட்சி அறைகள், வழக்கறிஞர்களுக்கான அறைகள் உள்ளிட்ட அறைகள் அமைந்துள்ளன. புதிதாக திறக்கப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தில் வேளாண்மை துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு குத்துவிளக்கு ஏற்றி வைத்து நீதிமன்ற அறைகளை பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் நீதிபதிகள், வழக்கறிஞர் சங்க பிரதிநிதிகள், பொதுப்பணித்துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.