.

Pages

Thursday, June 18, 2020

'COVID-19' காவலர் வழிகாட்டுதல் கையேடு வெளியீடு!

அதிரை நியூஸ்: ஜூன் 18
கரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவும் இத்தருணத்தில், முன்களப்பணியாளர்களாக அனைத்து இடங்களிலும், அனைத்து தரப்பு
மக்களுடனும் நெருங்கிய தொடர்பில் தன்னலம் பாராது பொது நலத்துடன் பணியாற்றும் முன்களப்பணியளர்களிலேயே, முதல் களப்பணியாளர்களாக காவல் துறையினர் பணியாற்றி வருவதால், காவல் துறையினர் கரோனா தொற்றிலிருந்து தங்களையும், தங்கள் குடும்பத்தின் நலனையும் கருத்தில் கொண்டு பாதுகாப்பான முறையில் பொது மக்களுக்கு பணியாற்ற வேண்டிய கடமை உள்ளதால், கரோனா வைரஸ் தொற்று பரவலில் இருந்து காவலர்கள் தங்களை காத்துக் கொள்வதற்கு எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அவ்வப்போது அரசு மற்றும் காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் அறிவித்துள்ள வழிகாட்டுதல்கள் அனைத்தையும் தொகுத்து "COVID-19 காவலர் வழிகாட்டுதல் கையேடு" என்ற புத்தகத்தினை 17.06.2020 அன்று தனது அலுவலகத்தில் தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர் டாக்டர் ஜெ.லோகநாதன் வெளியிட தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ் மகேஸ்வரன், காவல் துணை கண்காணிப்பாளர்கள் பி.வி நந்தகோபால் தஞ்சை ஊரக உட்கோட்டம், ஆர். சித்திரவேல், பணியிடைபயிற்சி மையம் தஞ்சாவூர், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர் ஆய்வாளர்கள் பெற்றுக் கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.