.

Pages

Thursday, June 4, 2020

மறுமையின் நுழைவாயில்களில் அதிரையர்களின் இறுதி வீடுகள் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூன் 04
அதிராம்பட்டடினத்தில் ஓலைக் குடிசைகள், ஓட்டு வீடுகள், மாடி வீடுகள், மாளிகைகள் என பலதரப்பட்ட வாழ்விடங்கள் நிறைந்திருந்தாலும் இறுதியாகவும் உறுதியாகவும் இருக்கப்போகும் இடங்கள் கபரஸ்தான் எனப்படும் சுமார் 6 அடி நீளமுள்ள மண்ணறைகளில் தான். இந்த மண்ணறைகளில் நம் முன்னோர்கள் பலர் நமக்கு முன் அடக்கப்பட்டும் விட்டனர், நமக்குபின் இன்னும் பலர் இன்னும் அடக்கப்படவும் உள்ளனர் என்பதால் இந்த மண்ணறைகள் கூட நம் தனி ஒருவர் எவருக்கும் சொந்தமானதும் அல்ல.

அதிராம்பட்டினத்தில் தற்போது பெரிய ஜும்ஆ பள்ளி மையவாடி, மரைக்கா பள்ளி மையவாடி, தக்வாப் பள்ளி மையவாடி, கடற்கரைத் தெரு மையவாடி, தரகர் தெரு மையவாடி என 5 மஹல்லாக்களில் உள்ள கபரஸ்தான்களிலேயே அனைத்து அதிரை முஸ்லீம்களின் ஜனாஸாக்களும் நல்லடக்கம் செய்யப்படுகின்றன. பெரிய தைக்காலுக்கு சொந்தமான மையவாடியின் நுழைவாயில் பகுதி வணிக வளாகமாக உருமாறி உள்ளது.

அதேபோல் குத்பா பள்ளி என்றிருந்தவரை செயல்பட்ட புதிய மையவாடி ஒன்றும் வணிக வளாகம் மற்றும் செல்போன் டவர் மையங்கள் ஆக மாறிவிட்டது. இதிலிருந்த பிரமாண்ட புளிய மரமும் பனைமரங்களும் இன்னும் கண்ணுக்குள் நிற்கின்றன.

பெரிய ஜும்ஆ பள்ளி என்று பெயர் மாறிய பிறகு பழைய மையவாடியில் மட்டுமே அடக்கம் செய்யப்பட்டு வருகின்றன. இவற்றில் சுமார் 350 ஆண்டுகளுக்கு முந்தைய கல்நட்டு அடையாளங்கள் இருந்தது புதியபள்ளி கட்டுமானத்தின் போது விரிவாக்கத்திற்காக இந்த அடையாளக் கற்கள் அப்புறப்படுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

மரைக்கா பள்ளியின் இடதுபுறமுள்ள மையவாடி கைவிடப்பட்டு வலதுபுற பகுதி மட்டுமே மையவாடியாக நீடிக்கின்றது. கைவிடப்பட்ட மையவாடி பகுதியின் ஒரு பகுதி இன்று பிசியானதொரு வணிக வளாகம்.

மேலும் தற்போதுள்ள கபரஸ்தானுக்குள் நுழையும் போது ஓத வேண்டிய துஆவை போர்டுகளில் எழுதி நமக்கு கற்றுத் தந்து கொண்டுள்ளனர்.இங்கு பழமையான கபுர்கள் தனியாக ஒரு பகுதியில் உள்ளன.

துலுக்கா பள்ளியாக இருந்தவரை செயல்பட்ட மையவாடியும் தற்போது தென்னை மரங்களுடன் கூடிய நடைபாதையாக மட்டுமே செயல்படுகின்றது. அதேவேளை தக்வா பள்ளியாக மாறியது முதல் தற்போதுள்ள மையவாடியில் மட்டுமே ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றன

கடற்கரை தெரு ஜும்ஆ பள்ளி மற்றும் மையவாடி மெச்சத்தக்க வகையில் மனிதனுக்கு மறுமையையும் மரணத்தையும் நினைவூட்டும் வாசகங்களை சுமந்து கொண்டுள்ளன.

தரகர் தெரு கபரஸ்தான் தன்னகத்தே ஒரு தண்ணீர் தொட்டியை சுமந்து கொண்டிருந்தாலும் ஜனாஸாக்கள் இன்னும் இங்கு தான் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றன.

இது நாம் அறிந்தவரையான தகவல் பதிவே. அதிரையின் மூத்த சகோதரர்கள் யாருக்கேனும் கைவிடப்பட்ட கபரஸ்தான் குறித்த வரலாற்று தகவல் தெரிந்தால் அது பற்றிய விபரங்களை பகிர்ந்து கொள்ளவும். அதேபோல் இப்பதிவில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் திருத்திக் கொள்ள சுட்டிக்காட்ட தவறாதீர்.

அதிரை அமீன்
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.