![]() |
அதிராம்பட்டினம் ரயில் நிலையம் |
கடந்தாண்டு அகல ரயில் பாதையாக மாற்றப்பட்ட திருவாரூா் - பட்டுக்கோட்டை - காரைக்குடி வழித்தடத்தில், தொடா்ந்து ரயில்களை இயக்க வேண்டும் என தஞ்சை மாவட்ட ரயில் உபயோகிப்பாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே மேலாளருக்கு சங்கத் தலைவா் பி.கே.டி. சண்முகம் அனுப்பியுள்ள கடிதத்தில் அவா் கூறியிருப்பது:
இந்நிலையில் கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் மாா்ச் 25-ஆம் தேதி முதல் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டது. பட்டுக்கோட்டை வழியாக இயக்கப்பட்ட டெமு பாசஞ்சா் ரயில், கேட் கீப்பா் பிரச்னையால் அதிகமான பயண நேரத்துடன் கால அட்டவணையில் இயக்கப்பட்டதால் பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லை. இதைக் கருத்தில் கொண்டு அந்த ரயில் ரத்து செய்யப்படுமோ என்ற அச்சம் ரயில் பயணிகளிடம் ஏற்பட்டுள்ளது.
எனவே, பட்டுக்கோட்டை, பேராவூரணி வழியாக இயக்கப்படும் டெமு பயணிகள் ரயிலை எக்காரணம் கொண்டும் ரத்து செய்யாமல், கரோனா இடா்பாடுகள் முடிவுற்று இயல்வு நிலை திரும்புவதற்குள் அந்த வழித்தடத்தில் போதிய கேட் கீப்பா்களை நியமித்து, அந்த ரயிலின் வேகத்தை அதிகரித்து தொடா்ந்து இயக்கவும், அந்தத் தடத்தில் பல புதிய ரயில்களை அறிமுகம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருணா தொற்று முடிந்து இயல்புநிலை வருகின்ற பொழுது திருவாரூர் காரைக்குடி மார்க்கத்தில் கேட் கீப்பர் பணி அமர்த்தப்பட்டு ரயில்களின் வேகமும் சேவையும் அதிகரிக்கப்பட வேண்டும். சென்னை எழும்பூரில் இருந்து ராமேஸ்வரத்திற்கு தலம் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் ஒரு ரயிலும் எழும்பூரிலிருந்து காரைக்குடி வரை இரவில் ஓர் அந்தோதயா ரயிலும் பரிசீலனையில் உள்ள தாம்பரம் செங்கோட்டை அதிவிரைவு ரயில் செயல்பாட்டிற்கு வர வேண்டும்
ReplyDeleteகலாம் எக்ஸ்பிரஸ் Kalam express
ReplyDelete