.

Pages

Thursday, June 11, 2020

தஞ்சாவூர் மாவட்டத்தில் தூர்வாரும் பணி 76.7 சதவீதம் நிறைவு: கண்காணிப்பு சிறப்பு அலுவலர் தகவல்!

அதிரை நியூஸ்: ஜூன் 11
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகள் அடுத்த மூன்று தினங்களில் நிறைவடையும் வகையில் பணிகள் விரைவுபடுத்தப்படும் என நீர்வள பாதுகாப்பு மற்றும் நதிகள் சீரமைப்பு கழகத் தலைவரும், குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகளுக்கான சிறப்பு கண்காணிப்பு அலுவலருமான சத்தியகோபால் தகவல் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் வட்டம், களிமேடு கிராமத்தில் பொதுப்பணித்துறை சார்பில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் ரூபாய் 13 லட்சம் மதிப்பீட்டில் முதலை முத்து வாரி வடிகால் தூர்வாரும் பணி, திருவையாறு வட்டம், குளிமாத்தூர் வெள்ளாம்பெரம்பூர் கிராமத்தில் ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் கோனகடுங்கலாறு வடிகால் தூர்வாரும் பணி, ஒரத்தநாடு வட்டம், ஆவிடநல்லவிஜயபுரம் கிராமத்தில் எட்டுபுலிகுடிகாடு மெயின் வாய்க்கால் மற்றும் வேதபுரி வாய்க்கால் தூர்வாரும் பணி பட்டுக்கோட்டை வட்டம், ஆத்திக்கோட்டை கிராமத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் பாசன விவசாய சங்கம் சார்பில் ரூபாய் 52 இலட்சம் மதிப்பீட்டில் பிச்சினி ஏரி புனரமைக்கும் பணி ஆகிய பணிகளை சிறப்பு கண்காணிப்பு அலுவலர் சத்தியகோபால், மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர், நீர்வளப் பாதுகாப்பு மற்றும் நதிகள் சீரமைப்பு கழகத் தலைவர் மற்றும் சிறப்பு கண்காணிப்பு அலுவலர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :-
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் திட்டத்தின் கீழ் ரூபாய் 67 கோடி மதிப்பீட்டில் 3450 கிமீ நீள அளவிலான பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. தஞ்சாவூர்,ä திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இதுவரை 2289 கிமீ நீள அளவிற்கு தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இது மொத்தப் பணிகளில் 72 சதவீதமாகும். தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் 945 கிமீ நீள அளவிற்கு ரூபாய் 23 கோடி மதிப்பீட்டில் 165 பணிகள் எடுக்கப்பட்டு, இதுவரை 720 கிமீ நீள அளவிற்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகள் சுமார் 76.7 சதவீதம் நிறைவடைந்துள்ளது. அடுத்த மூன்று தினங்களுக்குள் 100 சதவீத பணிகள் நிறைவடையும் வகையில் பணிகள் விரைவுபடுத்தப்படும். இவ்வாறு நீர்வள பாதுகாப்பு மற்றும் நதிகள் சீரமைப்பு கழகத் தலைவரும், சிறப்பு கண்காணிப்பு அலுவலருமான சத்தியகோபால் தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் அன்பரசன், காவிரி வடிநில கோட்ட செயற்பொறியாளர் ராஜன், வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் தமிழ்செல்வன், கல்லணைக் கால்வாய் கோட்ட செயற்பொறியாளர் முருகேசன், அக்னியாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் கனிமொழி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.