அதிரை நியூஸ்: ஜூன் 08
தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது வரை குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகள் 66 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக வேளாண் உற்பத்தி ஆணையரும், சிறப்பு கண்காணிப்பு அலுவலருமான ககன்தீப் சிங் பேடி தகவல் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம், தேனாம்படுகை ஊராட்சியில் பொதுப்பணித்துறை சார்பில் தூர்வாரும் திட்டத்தின் கீழ் ரூபாய் 60 லட்சம் மதிப்பீட்டில் குடமுருட்டி ஆறு தூர்வாரும் பணி, சென்னியமங்கலம் ஊராட்சியில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் தண்டாளம் வாய்க்கால் புனரமைக்கும் பணி, சேசம்பாடி ஊராட்சியில் தூர்வாரும் திட்டத்தின் கீழ் ரூபாய் 53 லட்சம் மதிப்பீட்டில் முடிகொண்டான் ஆறு தூர்வாரும் பணி, திப்பிராஜபுரம் ஊராட்சியில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூபாய் 38 லட்சம் மதிப்பீட்டில் திருமலைராஜன் ஆறு தூர்வாரும் பணி, தென்னூர் ஊராட்சியில் ரூபாய் 3.5 லட்சம் மதிப்பீட்டில் வில்வராயநல்லூர் வாய்க்கால் தூர்வாரும் பணி, திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியம், விசலூர் ஊராட்சியில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூபாய் 26.75 லட்சம் மதிப்பீட்டில் ஆத்திகுளம் வாய்க்கால் தூர்வாரும் பணி ஆகிய பணிகள் நடைபெறுவதை வேளாண் உற்பத்தி ஆணையரும், சிறப்பு கண்காணிப்பு அலுவலருமான ககன்தீப் சிங் பேடி, மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் இன்று (08.06.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், சிறப்பு கண்காணிப்பு அலுவலர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :-
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, டெல்டா மாவட்டங்களில் பொதுப்பணித்துறை சார்பில் தூர்வாரும் திட்டத்தின் கீழ் 392 பணிகள் ரூபாய் 67.25 கோடி மதிப்பீட்டிலும், குடிமராமத்து திட்டத்தின் கீழ் 1392 பணிகள் சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூபாய் 22.92 கோடி மதிப்பீட்டில் 165 தூர்வாரும் பணிகள் 945 கிமீ நீள அளவிற்கு நடைபெற்று வருகிறது. இதுவரை 66 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. தூர்வாரும் பணிகளில் 255 இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. ஒரு நாளுக்கு குறைந்தபட்சம் 45 கிமீ நீள அளவிற்கு தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டு வருகிறது. மேலும், குடிமராமத்து திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூபாய் 35.38 கோடி மதிப்பீட்டில் 109 பணிகள் பாசனதாரர்கள் சங்கம் மூலம் நடைபெற்று வருகிறது.
மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்படும் தண்ணீர், மூன்று நாட்களுக்குப் பிறகே தஞ்சாவூர் வந்தடையும் என்பதால், முதலில் தண்ணீர் வரும் பகுதிகளில் ஜூன் 14 ஆம் தேதிக்குள்ளும், கடைமடைப் பகுதிகளில் ஜூன் 20ஆம் தேதிக்குள்ளும் தூர்வாரும் பணிகளை முழுமையாக முடித்திடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடிமராமத்து திட்டத்தின் கீழ் முதலில் தண்ணீர் வரும் பகுதிகளில் 17 பணிகள் முன்னுரிமை அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளும் பாசனதாரர் சங்கத்தினருக்கு முதற்கட்ட தொகையை வழங்கிட பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு சிறப்பு கண்காணிப்பு அலுவலர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது பயிற்சி ஆட்சியர் அமித், பொதுப்பணித்துறை மேற்பார்வை பொறியாளர் அன்பரசன், வேளாண்மைத் துறை இணை இயக்குனர் ஜஸ்டின் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.