.

Pages

Friday, June 12, 2020

14 ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.16.89 கோடி மதிப்பீட்டில் 1689 குளங்கள் தூர் வாரும் பணி: ஆட்சியர் தகவல்!

அதிரை நியூஸ்: ஜூன் 12
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் இன்று (12.06.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியம், கோவிலூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூபாய் 4.98  லட்சம் மதிப்பீட்டில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள அரசமரத்தடி வாய்க்கால் தூர்வாரும் பணி, ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியம்ää புதூர் ஊராட்சியில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூபாய் ஒரு லட்சம் மதிப்பீட்டில் குயவன் குளம் புனரமைக்கும் பணி, ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியம், கண்ணந்தங்குடி கிழக்கு ஊராட்சியில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூபாய் ஒரு லட்சம் மதிப்பீட்டில் சக்கரை குளம் புனரமைக்கும் பணி ஆகிய பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் செய்தியாளர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :-
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 14 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 1689 குளங்களை ரூபாய் 16 கோடியே 89 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாருவதற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பயனீட்டாளர்கள் குழு மூலம் தூர்வாரும் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அக்டோபர் 2019 வரை 1083 குளங்கள் முழுமையாக தூர்வாரப்பட்டுள்ளது.

மீதமுள்ள 606 குளங்களை  தூர்வாரும் பணி மே 2020 - ல் ஆரம்பிக்கப்பட்டு, இதுவரை 64 குளங்கள் முழுமையாக தூர்வாரப்பட்டுள்ளது. 30.06.2020 க்குள் மீதமுள்ள குளங்களை தூர்வாரிடும் வகையில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், பாசன வசதி மற்றும் கால்நடைகள் பயன்பாட்டிற்கு பேருதவியாக அமையும்.

பொதுப்பணித்துறையின் சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்களை ஊரக வளர்ச்சித் துறை மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 647.42 கிலோமீட்டர் நீள அளவிற்கு தூர்வாரிட நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுää தற்போது வரை 596.34 கிமீ நீள அளவிற்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகளை 15.06.2020 க்குள் முடித்திடும் வகையில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

மேலும், விவசாய பெருமக்களின் கோரிக்கைக்கிணங்க இதர வரத்து வாய்க்கால்கள் மற்றும் பாசன வாய்க்கால்கள் சுமார் 9053.54 கிமீ நீளத்திற்கு தூர்வாரிட தேர்வு செய்யப்பட்டு, இதுவரை 1401.37 கிமீ நீளத்திற்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகளை விரைந்து முடித்திடும் வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தினந்தோறும் சராசரியாக 90,000 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தூர்வாரும் பணிகளை செய்து முடிப்பதன் மூலம் இவ்வருடம் தங்குதடையின்றி விவசாயத்திற்கு பாசன வசதி கிடைக்க பெறும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

செய்தியாளர் சுற்றுப்பயணத்தின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, மாவட்ட ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் ராமசாமி, ஒரத்தநாடு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜய், கிருஷ்ணமூர்த்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுருளி பிரபு மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.