அதிராம்பட்டினம், ஜூன் 11
அதிராம்பட்டினம் ~ ராஜாமடம் இடையே கிழக்கு கடற்கரைச் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் விபத்து அபாயம் உள்ளதால் அதை உடனே சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலக வங்கி நிதி உதவியுடன் கிழக்கு கடற்கரை சாலையான நாகப்பட்டினம் முதல் கட்டுமாவடி வரை 107.20 கிலோ மீட்டர் நீளத்திற்கான மாநில நெடுஞ்சாலையானது, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம் திருச்சிராப்பள்ளி கோட்டத்தின் மூலம் செயல்பட்டு வருகிறது. இதன் பராமரிப்பு பணிகள், 5 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் ஒப்பந்ததாரர் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், அதிராம்பட்டினம் ~ ராஜாமடம் இடையே பெரிய ஏரி அருகில் கிழக்கு கடற்கரைச் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் அவ்வழியாக செல்லும் இருசக்கர மற்றும் கனரக வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக இப்பள்ளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.