அதிராம்பட்டினம், ஜூன் 22
நாம் தமிழர் கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பு அக்கட்சியின் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் மீ. ஜெஹபர் சாதிக் தலைமை வகித்தார். அக்கட்சியின் முன்னாள் செயலாளர் ஏ.ஜெ ஜியாவூதீன், பட்டுக்கோட்டை தொகுதி செயலர் பிரபாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், மின்சார கட்டண அளவீடு குளறுபடிகளை சீர் செய்யக் கோரி மின்வாரிய அலுவலர்களிடம் மனு அளிப்பது, அதிராம்பட்டினம் பேரூர் பகுதிகளில் தடையில்லா மின்சாரம் விநியோகிக்க வலியுறுத்துவது, அதிராம்பட்டினம் பேரூர் பகுதி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு உண்டான பணிகளை ஜமாத்தார்கள், பஞ்சாயத்தார்கள், இளைஞர்கள் சங்க நிர்வாகிகள், சமூக நல அமைப்புகள் ஆகியோருடன் ஒன்றிணைந்து முன்னெடுப்பது, கரோனா ஊரடங்கில் தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு என்ற பெயரில் பெற்றோரிடம் கட்டணம் வசூல் செய்வது, ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகத்தில் ஏற்படும் முறைகேடு ஆகியவற்றை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது, அயல்நாடுகளில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை அரசு செலவில் தாயகம் அழைத்து வர துரித நடவடிக்கை மேற்கொள்ள அரசை வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, லடாக் எல்லையில் உயிர் நீத்த இந்திய வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர். இக்கூட்டத்தில், அக்கட்சியை சேர்ந்த சிவக்குமார், அப்துல் முனாப், சைபுதீன், மொய்னூதீன், ராஜிக், இப்ராகிம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர், நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் மீ. ஜெஹபர் சாதிக் கூறியது (இணைப்பில் காணொளி);

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.