.

Pages

Monday, June 15, 2020

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம்!

அதிரை நியூஸ்: ஜூன் 15
தஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.கோவிந்த ராவ் தலைமையில் இன்று (15.06.2020) நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களின் விவரங்கள், நோய்த்தொற்று பரிசோதனை செய்யப்பட்டவர்களின் விவரங்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்களின் விவரங்கள், வெளிநாடு, வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்து தனிமைப்படுத்தப்பட்டள்ளவர்களின் விவரங்கள் ஆகியவை குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டறிந்தார்.

மேலும், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மூன்று நடமாடும் பரிசோதனை மையங்களின் செயல்பாடுகள் குறித்தும், நடமாடும் பரிசோதனை மையங்கள் மூலம் பரிசோதனை செய்யப்பட்டவர்களின் விவரங்கள் குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டறிந்தார்.

வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து, குறிப்பாக சென்னையிலிருந்து வருபவர்களின் விவரங்களை ஊரகப் பகுதிகளில் ஊராட்சி மன்ற தலைவர் மூலமாக சேகரித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், முகக்கவசம் அணிதல் தொடர்பாக கிராமங்கள்தோறும் விழிப்புணர்வு வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமெனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு இதுவரை விதிக்கப்பட்டுள்ள அபராதம் குறித்த விவரங்களை கேட்டறிந்த மாவட்ட ஆட்சித் தலைவர் மூன்று நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் அலுவலர்களை நியமித்து முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்திட வேண்டும் என தெரிவித்தார். வணிக கடைகளில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு பொருட்கள் வழங்கக்கூடாது எனவும், கடையின் உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்திட வேண்டுமெனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

சமூக இடைவெளி முறையை கடைப்பிடிக்காத கடைகளை முதலில் எச்சரிக்கை செய்ய வேண்டுமெனவும், அதே நிலை தொடரும்பட்சத்தில், கடையை மூடிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன்,  மாவட்ட வருவாய் அலுவலர் அரவிந்தன், பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ், பயிற்சி ஆட்சியர் அமித், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் கதிரேசன் மற்றும் அனைத்துத்துறை முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.