அதிரை நியூஸ்: ஜூன் 05
உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் இன்று (05.06.2020) மரக்கன்றுகளை நடும் பணியினை துவக்கி வைத்தார்.
தஞ்சாவூர் மன்னர் சரபோஜி கல்லூரியில் உலக சுற்றுச்சூழல் தினம் நிகழ்ச்சி நடைபெற்றது. கவின்மிகு தஞ்சை தன்னார்வ தொண்டு அமைப்பு, தஞ்சாவூர் மன்னர் சரபோஜி கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அமைப்பு, அருங்கானுயிர் அறக்கட்டளை ஆகியவை இணைந்து ஒருங்கிணைந்து மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை நடத்தினர்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு மரம் நடும் பணியினை துவக்கி வைத்தார். மேலும், கவின்மிகு தஞ்சை இயக்கம் சார்பில் பல்வேறு இணையவழி கருத்தரங்கங்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான இணையவழி ஓவியம், பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் செந்தமிழ்ச்செல்வி, முன்னாள் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் நல்.ராமச்சந்திரன், கவின்மிகு தஞ்சை இயக்கத் தலைவர் டாக்டர். ராதிகா மைக்கேல், கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் டாக்டர் சித்திரவேல், டாக்டர் சுவாமிநாதன், கவின்மிகு தஞ்சை இயக்க செயலாளர் டாக்டர். ராம் மனோகர், கானுயிர் அறக்கட்டளை இயக்குனர் சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.