.

Pages

Sunday, June 21, 2020

அனுமதியின்றி மணல் எடுப்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்: ஆட்சியர் எச்சரிக்கை!

அதிரை நியூஸ்: ஜூன் 21
தஞ்சாவூர் மாவட்டம், உரிய அனுமதியின்றி மண், மணல், கிராவல் மற்றும் இதர கனிமங்கள் எடுப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனுமதியின்றி மணல் எடுத்தலை தடுப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தலைமையில் சிறப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.

வருவாய்த்துறை, காவல்துறை, சுரங்கத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கனிமங்களை அனுமதியின்றி குவாரி செய்தல், சேமித்து வைத்தல், வாகனங்களில் கொண்டு செல்லுதல் ஆகியவை தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், அனுமதியின்றி மணல் எடுப்பதை கட்டுப்படுத்தும் வகையில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபடுமாறு வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அலுவலர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, கடந்த 19.06.2020 மற்றும் 20.06.2020 ஆகிய இரண்டு நாட்களில் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அலுவலர்கள் மேற்கொண்ட அதிரடி ஆய்வில், உரிய அனுமதியின்றி மணல் எடுத்த 05 லாரிகள், 47 மாட்டு வண்டிகள், 08 இருசக்கர வாகனங்கள் மற்றும் 03 ஹிட்டாச்சி இயந்திரங்கள் அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டு, இச்செயலில் ஈடுபட்ட வாகன ஓட்டுனர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் ஆகியோர் மீது காவல்துறையினரால் 50 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

மேலும், அனுமதியின்றி எடுக்கப்பட்ட 20.5 யூனிட் மணல், 84 சாக்கு மணல் மூட்டைகள் ஆகியவை காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மண், மணல், கிராவல் மற்றும் இதர கனிமங்களை அனுமதியின்றி குவாரி செய்பவர்கள், எடுத்துச் செல்பவர்கள், சேமித்து வைப்பவர்கள் ஆகியோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் எச்சரித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.